தாலிபோட் பனை
| தாலிபோட் பனை | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
காரிஃபா அம்ப்ராகுலிஃபெரா (Corypha umbraculifera) ஓவியம் (1913)
|
||||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||||
|
தரவு போதாது (IUCN)
|
||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| காரிஃபா அம்ப்ராகுலிஃபெரா L. |
தாலிபோட் பனை (Talipot palm) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும்.
உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை இதுவாகும். வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.[1]இது ஒரு விசிறி வகை பனையாகும். இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிற்றிலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை மிகப்பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உயரத்தில் பல இலட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும். இப்பனை ஒரு முறை மட்டுமே பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது. இதன் மலர்கள் இம்மரம் 30 முதல் 80 ஆண்டுகள் வயதான பின்தான் பூக்கின்றன. மேலும் இது காய்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகும். அதன் பின்னர் சிறு சிறு ஒற்றை விதை கொண்ட பழங்களைக் கொடுத்துவிட்டு இம்மரம் இறந்து விடும்.
பொருளடக்கம் |
[தொகு] பயன்கள்
இம்மரத்தின் இலைகள் பனையோலை எழுது முறையில் பயன்பட்டன. மேலும் இம்மரத்திலிருந்து பனங்கள் எடுக்கப்பட்டது. இம்மரத்தின் இலைகள் குடையாகவும் விசிறியாகவும் பயன்படுகின்றன. கேரளத்தில் இது குடை பனை என்றும் அழைக்கப்படுகிறது.
[தொகு] படக் காட்சியகம்
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் Corypha_umbraculifera தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Johnson (1998). Corypha umbraculifera. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006.
- PACSOA: Corypha umbraculifera
- FAO reports: tropical palms, palm products, palms with development potential