தாலிபான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாலிபான் இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தலிபானின் சின்னம்

தலிபான் (Taliban, பாஷ்டோ மொழி: طالبان, டாலிபான்) எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் "தலிபான்" பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையில் போரிட்டு வருகிறது[1].

தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும்் இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர் [1].

குறிப்புகள்[தொகு]

  1. ISAF is made up of 39 countries, including all 26 NATO allies but also many other non-NATO countries. See ISAF Troop Contribution Placement, December 5, 2007

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாலிபான்&oldid=1624199" இருந்து மீள்விக்கப்பட்டது