தாராப்பூர் அணுமின் நிலையம்

ஆள்கூறுகள்: 19°49′40″N 72°39′32″E / 19.82778°N 72.65889°E / 19.82778; 72.65889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாராப்பூர் அணுமின் நிலையம்
தாராப்பூர் அணுமின் நிலையம்
நாடுஇந்தியா
அமைப்பு துவங்கிய தேதி1962
இயங்கத் துவங்கிய தேதிஅக்டோபர் 28, 1969
இயக்குபவர்இந்திய அணுமின் கழகம்
உலை விவரம்
செயல்படும் உலைகள்4 x 350 MW
மின் உற்பத்தி விவரம்
ஆண்டு உற்பத்தி4,829 GW·h
மொத்த உற்பத்தி71,188 GW·h
நிலவரம்:சூலை 24, 2007

தாராப்பூர் அணுமின் நிலையம் (Tarapur Atomic Power Station) மகாராட்டிர மாநிலம், தாராப்பூரில் உள்ள ஒரு இந்திய அணுமின் நிலையம் ஆகும்.

இங்கு அக்டோபர் 1969ல் கொதிக்கும் நீர் வகையான 200 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணுக்கரு அணுசக்தி உலைகள் கொண்ட ஆலைகள் அமைக்கப் பட்டன. இதற்கான திட்டப் பணிகள் 1962ம் ஆண்டே தொடங்கி விட்டன.[1] இந்த நிலையம் இந்திய அணுமின் கழகத்தின் நிருவாகத்தில் செயல்பட்டு வருகிறது. துவக்க நாட்களின் இவ்விரு உலைகளின் திறன் 200 மெகாவாட் அளவிற்கு இருந்தாலும், காலப் போக்கில் அவை 160 மெகாவாட் அளவிற்கு குறைந்தது. இந்த முதல் கட்ட ஆலைகளை அமெரிக்காவின் பெக்டேல் நிறுவனமும், ஜெனெரல் எலெக்ட்ரிக் நிறுவனமும் இணைந்து அருகாமையில் உள்ள அக்கர்பட்டி கிராமத்தில் கட்டி முடித்தன. ஆசியாவிலேயே முதன்முதலாக செயல்பட்ட அணுக்கரு அடிப்படையிலான மின்சாரம் தயாரிக்கும் ஆலை என பெயர்பெற்றது. தற்பொழுது இங்கு நான்கு அணுக்கரு அணுசக்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன, அவற்றின் மொத்த உற்பத்தித் திறன் 1400 மெகா வாட் ஆகும்.

சமீபத்தில் உயர்ந்த அழுத்தம் கொண்ட தண்ணீருடன் கூடிய 540 மெகாவாட் திறன் கொண்ட இரு உலைகளையும் சோதனை ஓட்டத்திற்குப் பிறகு வெற்றிகரமாக தாராப்பூரில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் செயல்படும் அணுசக்தி மின்சார உற்பத்தி ஆலைகளில், இதுவே மிகவும் அதிக திறன் கொண்ட ஆலையாகும். மதிப்பீடு செய்த அளவில் இருந்து மிகவும் குறைவான செலவில், குறிப்பிட்ட நாளுக்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் இந்த ஆலை இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனத்தால் கட்டி முடிக்கப் பெற்றது, மிகவும் பாராட்டுக்குரியதாகும். இப்பொறுப்பை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனமும், காம்மன் இந்தியா நிறுவனமும் இணைந்து கட்டி முடித்தன.

இவ்வாலைகளில் பணி புரியும் பணியாளர்களுக்கு பயன் படும் வகையில் இங்கிருந்து அருகாமையில் உள்ள தாராபூர் அணுசக்தி நிலைய வீட்டு வசதி வளாகத்தையும் பெக்டேல் நிறுவனம் கட்டிக் கொடுத்தது. முதலில் திட்டத்தில் செயல்பட்ட ஆங்கிலேயே அதிகாரிகளின் வசதிக்காக பல நல்ல வீடுகள் இங்கே கட்டினார்கள். இப்பொழுது முதலில் திட்டத்தில் ஈடுபட்ட ஆங்கிலேயர்கள் தமது நாட்டிற்கு திரும்பிச் சென்றதை அடுத்து, இப்போது இங்குள்ளவர்களே குடியிருந்து வருகின்றனர்.

தாராப்பூரில் இயங்கும் அணு மின் உலைகள்[தொகு]

தாராப்பூரில் முதன் முதலில் அக்டோபர் 28, 1969 அன்று முதல் இரு 160 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கொதிக்கும் நீர் வகையிலான அணு மின் உலைகள் செயல்படத் துவங்கின.

பிறகு நாளடைவில் 540 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கன நீர் உயர் அழுத்த நீர் உலை எண் நான்கு அணு உலை 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் செயல்படத் துவங்கியது.

பின்னர் இதே போன்ற 540 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கன நீர் உயர் அழுத்த நீர் உலை எண் மூன்று அணு உலை 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி முதல் செயல்படத் துவங்கியது.

References[தொகு]

  1. 1. ^ "Department of Atomic Energy, Government of India". Dae.gov.in.. 2009-11-03. http://www.dae.gov.in./contacts.htm பரணிடப்பட்டது 2011-02-27 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2010-08-06