தாரமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரமங்கலம்
—  நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் ஓமலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ . கார்மேகம், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

30,222 (2011)

3,109/km2 (8,052/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.72 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/tharamangalam

தாரமங்கலம் (ஆங்கிலம்:Tharamangalam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களுக்கு புகழ்பெற்றது. தாரமங்கலம் கைத்தறி சேலைக்கு பெயர் பெற்றது. இங்கு நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் – 1870-களில்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் – 1870-களில்

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்[தொகு]

16 அக்டோபர் 2021 அன்று தாரமங்கலத்தை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]

அமைவிடம்[தொகு]

தாரமங்கலம் நகராட்சிக்கு கிழக்கே சேலம் 25 கிமீ; வடகிழக்கு ஓமலூர் 10 கி மீ; மேற்கே மேட்டூர் 30 கிமீ; வடக்கே மேச்சேரி 20 கிமீ; தெற்கே சங்ககிரி 29 கிமீ தொலைவிலும் உள்ளது.

நகராட்சி அமைப்பு[தொகு]

9.72 சகிமீ பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். தாரமங்கலம் நகராட்சியானது 24. ஆகத்து 2021 அன்று தமிழக அரசால் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 7,406 வீடுகளும், 30,222 மக்கள்தொகையும், கொண்டது.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
  7. Tharamangalam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரமங்கலம்&oldid=3930173" இலிருந்து மீள்விக்கப்பட்டது