தாயக் கட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேலைதேய வடிவ,ஆசிய வடிவ மற்றும் சசினோ தாயக் கட்டை

தாயக் கட்டை பொதுவாக தாயக் கட்டைகள் மரத்திலோ அல்லது வெண்கலம் போன்ற உலோகத்திலோ செய்யப்பட்டிருக்கும். மேலும் தாயக் கட்டைகள் நான்கு முகங்களைக் கொண்டிருக்கும். சில வகை தாயக் கட்டைகள் ஆறு முகங்களைக் கூடக் கொண்டிருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக 7×7 தாயக்கட்ட விளையாட்டில் புளியங்கொட்டைகளை உருட்டி விளையாடுவர். நான்கு முத்துக்களை ஒரு பக்கம் வெண்ணிறமாகும்படி பாறையில் தேய்த்து விடுவர். அவற்றில் ஒரு முத்தில் மட்டும் மறுபுறம் அரைகுறையாகத் தேய்க்கப்பட்டிருக்கும். பின்பு இவற்றை ஒரு தேங்காய்ச்சிரட்டையில்போட்டு உருட்டிவிடுவர். ஒன்று அல்லது இரண்டு முத்துக்கள் மட்டும் வெண்புறம்காட்டி விழுந்தால் விளையாடுபவர் அத்தனை இலக்கங்கள் நகர்த்த வேண்டும். மூன்று முத்துக்கள் வெண்புறம் காட்டி நான்காவது கருநிறம்காட்டினால் மூன்று இலக்கங்களும் நான்காவது அரைகுறை வெண்ணிறம் கொண்டிருந்தால் நான்கு இலக்கங்களும் நகர்த்தலாம். எல்லா முத்துக்களும் வெண்ணிறம் காட்டினால் ஆறு இலக்கங்களும் கருநிறம் காட்டினால் எட்டு இலக்கங்களும் கிடைக்கும். மீண்டும் ஒருமுறை உருட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.

பொருளடக்கம்

தாயம் [தொகு]

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும். இவ்விளையாட்டை இரண்டு முதல் நான்கு பேர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

வரலாறு [தொகு]

தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது.

நான்முக தாயக் கட்டை [தொகு]

நான்முக தாயக் கட்டையின் மூன்று பக்கங்களில் (1), (2) மற்றும் (3) புள்ளிகள் இருக்கும். ஒரு பக்கத்தில் புள்ளி ஏதும் இருக்காது (0). இரு நான்முக தாயக் கட்டைகளை உருட்டினால் 1, 2, 3, 4, 5, 6, 12 (0,0) ஆகிய எண்கள் விழும். 1, 5, 6, 12 எண்களை சிறப்பாகக் கருதி மறுமுறை தாயக் கட்டையை உருட்டுவது வழக்கம். இவ்வெண்கள் அடுத்தடுத்து மாறி மாறி விழுந்து கொண்டிருந்தால் அதை விருத்தம் என அழைப்பதுண்டு.

அறுமுக தாயக் கட்டை [தொகு]

அறுமுக தாயக் கட்டையின் எல்லாப் பக்கங்களிலும் புள்ளிகள் 1, 2, 3, 4, 5, 6 என பொறிக்கப்பட்டிருக்கும். இரு அறுமுக தாயக் கட்டைகளை உருட்டினால் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ஆகிய எண்கள் விழும்.

வெளியிணைப்புக்கள் [தொகு]

தாயம் - ரிதன்யாவின் தொகுப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாயக்_கட்டை&oldid=1381608" இருந்து மீள்விக்கப்பட்டது