தாமரைக் கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பிக் கோலம்

தாமரைக் கோலம் ஒன்றுடனொன்று 45 பாகை கோணத்தில் வெட்டும் 4 இரட்டைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோடுகளின் ஒன்றுவிட்டொரு முனைகளை வளை கோடுகளால் இணைத்து எட்டு இதழ்களுடைய தாமரை வடிவம் வரையப்பட்டுள்ளது.

எளிமையான கோலம்[தொகு]

எளிமையான கோலங்களிலொன்று. இதன் ஒரு வேறுபாடாக ஒற்றைக் கோடுகளை உபயோகித்தும் இத் தாமரை வடிவம் வரையப்படுவதுண்டு.

இந்தியப் பண்பாட்டில் தாமரை[தொகு]

இந்தியப் பண்பாட்டில் தாமரை பன்னெடுங் காலமாகவே முக்கிய இடத்தை வகித்துவருகிறது. இந்து, பௌத்த கலைகளில் தாமரைக்கு முக்கியத்துவம் உண்டு.

சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை[தொகு]

சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை போன்றவற்றில் தாமரை சிறப்பிடம் பெறுகிறது. இதனால் தாமரைக் கோலங்களும் மிகப் பழங்காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வருவதாகக் கூற முடியும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரைக்_கோலம்&oldid=3446226" இலிருந்து மீள்விக்கப்பட்டது