தாக்கோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாக்கோ (ஆங்கிலம்: Taco, பிரெஞ்சு: Taco, எசுப்பானியம்: Taco) என்பது சோள அல்லது கோதுமை தார்த்தியாவை கொண்டு ஒரு கலவையை(Filling) சுற்றி மடித்தோ அல்லது நீள வாக்கில் உருட்டியோ செய்யப்படும் ஒரு பாரம்பரிய மெக்சிக்க உணவு. தாக்கோ மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கேசம்(Cheese) மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பலவகை கலவைகளால் செய்யப்படுகிறது.
[தொகு] பாரம்பரிய தாக்கோக்கள்
தாக்கோவில் பல பாரம்பரிய வகைகள் உள்ளன:
- சுட்ட தாக்கோக்கள் (Tacos de Asador)
- தலை தாக்கோக்கள் (Tacos de cabeza)
- திரீப தாக்கோக்கள் (Tacos de cazo)
- இனிய தாக்கோக்கள்/மிருதுவான தாக்கோக்கள் (Tacos sudados)
- அதோப தாக்கோக்கள் (Tacos Al pastor/De Adobada)
- பொரித்த தாக்கோக்கள் (Tacos dorados)
- மீன் தாக்கோக்கள் (Tacos de pescado)