தற்காலிக பாரிசவாத தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Transient ischemic attack(ya)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநரம்பியல், neurosurgery, நாளஞ்சார் அறுவை சிகிச்சை, internal medicine
ஐ.சி.டி.-10G45.9
ஐ.சி.டி.-9435.9
நோய்களின் தரவுத்தளம்13253
மெரிசின்பிளசு000730
ஈமெடிசின்emerg/604
ம.பா.தD002546

தற்காலிக பாரிசவாத தாக்குதல் (ரிஐஏ) என்பது ஒரு ‘பாரிசவாதத்தின் அறிகுறி’ ஆகும். பாரிசவாதம் போன்றே எச்சரிக்கை ஏதுமின்றி திடீரென இந்தத் தாக்குதல் இடம் பெறக் கூடும். மேலும் சில நிமிடங்கள் அல்லது 24 மணி நேரம் வரையில் நீடிக்கக் கூடும். ரிஐஏ யின் அறிகுறிகள் பாரிசவாதத்தினுடையதைப் போன்றதேயாகும். எனினும் அறிகுறிகள் இறுதியாக மறைந்துவிடும் என்பதே ரிஐஏக்குள்ள வித்தியாசமாகும்.

மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதுடன் முழுமையான பாரிசவாதம் ஏற்படக்கூடிய ஆபத்து உங்களுக்கு உள்ளது என்பதன் எச்சரிக்கையே ரிஐஏ ஆகும். பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதமானவர்கள் ரி.ஐ.ஏ.யினாலும் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.