தமுக்கம் மைதானம்
தமுக்கம் மைதானம் மதுரையின் வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஒரு மைதானமாகும். விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டு மதுரை நாயக்க வம்சத்தால் பராமரிக்கப்பட்டுவந்தது. அக்காலத்தில் குதிரைப் பந்தயம், யானைப் பந்தயம், மாட்டுச் சண்டைகள் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் சிலம்பு, கத்திச் சண்டை போன்ற கலைகளும் இங்கு நடத்தப்பயன்பட்டது.[1]. இம்மைதானம் இதனருகேவுள்ள தமுக்கம் அரண்மனையின்(தற்போதைய காந்தி அருங்காட்சியகம்) கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டது.
பொருளடக்கம் |
இதன் அமைப்பு [தொகு]
மைதானம் அழகர் கோவில் செல்லும் சாலையில் தள்ளாகுளம் பகுதியில் அமைந்துள்ளது. கலையரங்கம் உட்பட சுமார் 50000 ச.அடி பரப்பளவை கொண்ட மைதானமாகும். 1.5 லட்சம் மக்கள் கொள்ளளவு கொண்ட இந்த மைதானத்தின் கலையரங்கம் மட்டும் 20,000 பேர் பங்கேற்கும் வசதியுள்ளது. மதுரை மாநகராட்சியின் மேற்பார்வையில் பொது நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது[2]. இதன் முன் வாசலில் தமிழன்னை சிலையும் பெரியார் சிலையும் உள்ளது. அருகே இராஜாஜி சிறுவர் பூங்காவும், மதுரை அமெரிக்கன் கல்லூரியும் உள்ளது.
பொது நிகழ்ச்சிகள் [தொகு]
மதுரையின் நெருசலுக்கு அப்பாலிருப்பதாலும், இதன் பரந்த வெளியாகயிருப்பதாலும் பல அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு இந்த மைதானம் தற்போது பயன்படுத்தப்பட்டுவருகிறது. அரசியல் கட்சிக் கூட்டம், திருமணங்கள், அரசி நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், இலக்கியக்கூட்டம், கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என பலவித பொது நிகழ்ச்சிகள் நடைபெருகிறது. சித்திரைக் கண்காட்சி, வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சி[3], புத்தகத் திருவிழா போன்றவை ஆண்டுதோரும் நடைபெரும் முக்கிய நிகழ்ச்சிகளாகும்.[4][5][6]
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ The Hindu Metro Plus | Date:Sep 15, 2003
- ↑ தினமலரில் வாடகை விபரம்
- ↑ தினமலர் செய்தி
- ↑ இந்தியா மார்ட் செய்தி
- ↑ தி இந்து மதுரை பதிப்பு
- ↑ மடீட்சியா
|
||||||||||||||||||||||||||||||||||