தமிழ் வலைப்பதிவர் பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ் வலைப்பதிவர் பட்டறை வலைப்பதிவு அனுபவங்களையும், நுட்பங்களையும், தொடர்புகளையும் தமிழ் வலைப்பதிவர் தம்மிடையே நேரடியாக பகிர்ந்து கொள்வதற்கும், தமிழ் வலைப்பதிவுக் களத்தை புதியவர்களுக்கு அறிமுகப்படுத்தி பயற்சி வழங்குவதற்கும் ஏதுவாக தன்னார்வலர் முறையில் ஒழுங்கமைக்கப்படும் ஒரு நிகழ்வே தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆகும். முதல் தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆகஸ்ட் 05, 2007 அன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முதலாவது தமிழ் வலைப்பதிவர் பட்டறை முழுக்க முழுக்கத் தன்னாவலர்களால், இலாப நோக்கம் இல்லாமல், தமிழ் வழி செயல்பாடு மூலம் (மடல் உரையாடல். நிகழ்வு முழுக்க தமிழில்), ஆரவார, ஆடம்பரத் தன்மைகளைத் தவிர்த்து, திறந்த முறையில், ஆவணப்படுத்தப்பட்ட வெளிப்படையான நிதி மேலாண்மையுடன், துல்லியமாகத் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இது தமிழ் சார் பிற நிகழ்வு ஒருங்கிணைப்பு ஒழுங்கமைப்பு முறைகளில் இருந்து வேறுபட்டு ஒரு திறனான மாற்று முன்மாதிரியை நிலைநிறுத்தியுள்ளது. தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஒருங்கிணைப்பில் விக்கித் தொழில் நுட்பமும் பயன்பட்டதும், கட்டற்ற மென்பொருள்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டமையும் இங்கு குறிக்கத் தக்கது.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்