தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் நாட்டின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் (Tamil Nadu)

தமிழ் நாட்டில் பாதுகாக்கப்பட்ட இடங்கள்[1]

தமிழ் நாட்டில் பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஏறத்தாழ 22,643 சதுர கிலோமீட்டர்களாகும். இது மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 2.54% ஆகும். இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்கள் நில அளவை மாநில வாரியாக வரிசைபடுத்தினால் தமிழ் நாடு 14வது இடத்தில் உள்ளது. [2]

தமிழ் நாட்டில் முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடங்கள் பின்வருவன: 3 உயிர்கோள காப்பகங்கள், 5 தேசிய பூங்காகள், 8 வனஉயிரின உய்விடம், 4 யானை காப்பகங்கள், 3 புலிகள் காப்பகங்கள், 12 பறவைகள் காப்பகங்கள் ஆகும். இவ்வனைத்து பாதுகாக்கப்பட்ட இடங்களிலும் மிகவும் அழிவுறும் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கும் வனவிலங்கள் வாழ்கின்றன.

உயிர்கோளக்

காப்பகம்

தேசிய

பூங்கா

வனஉயிரின

உய்விடம்

பறவைகள்

காப்பகம்

விலங்கியல்

பூங்கா


தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு வனத்துறை
Seal of Tamil Nadu.jpg
காடு வளர- நாடு உயரும்
தமிழக மொத்த
வனப் பரப்பளவு
22,877 ச.கி.மீ
காப்புக் காடுகள்
பரப்பளவு
19,388 ச.கி.மீ
பாதுகாக்கப்பட்ட காடுகள்
பரப்பளவு
2,183 ச.கி.மீ
வகைப்படுத்தா காடுகள்
பரப்பளவு
1,386 ச.கி.மீ
தமிழகத்தின் மொத்த
இந்திய வனப் பணி
அலுவலர்கள்
140

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

தென் இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட இடங்களை தேர்வு செய்வதும், பின் அதை காப்பதும் பிரித்தானியர்களின் வருகைக்கு பின்பே நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ் நாட்டின் முதல்பாதுகாக்கப்பட்ட இடமாக முதுமலை வனவிலங்கு சரணாலயம் 1940ல் அறிவிக்கப்பட்டது.


[தொகு] தாவரங்கள் (நிலைத்திணை)

இந்தியாவில் மொத்தம் காணப்படும் 17,672 வித்துமூடித் தாவர சிற்றினங்களில் 5640 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் காணப்படுகிறன, இது இந்தியாவின் மொத்த தாவரங்களில் 32 % சதவீதமாகும். தமிழகத்தில் 533 அகணிய (உள்ளெல்லைக்குரிய) தாவரங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.தமிழ் நாட்டில் 4 வித்துமூடியிலி தாவரங்களும் உண்டு. இந்தியாவில் உள்ள 1022 பன்னத்தாவர இனத்தில் தமிழ் நாட்டில் 184 சிற்றினங்கள் உள்ளன.[3]

[தொகு] விலங்குகள்

தமிழ் நாட்டில் காணப்படும் முக்கிய விலங்கினங்கள் பின்வருவன[4]:

  • மீன்கள்: 126 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: ?)
  • ஈரூடகவாழ்விகள்:76 (அகணிய உயிரிகள்: 36)
  • பறவைகள்: 454 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 17)
  • பாலூட்டிகள்: 187 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 24)
  • ஊர்வன: 177 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 63)

[தொகு] மேற்கோள்கள்

  1. Tamil Nadu Forest Dept. Eco-Tourism
  2. Tamil Nadu Forest Dept. Wild Biodiversity
  3. Tamil Nadu Forest Dept.Floral Diversity
  4. Tamil Nadu Forest Dept., Retrieved 9/9/2007Faunal Diversity
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்