தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் தேசிய கூட்டமைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Tamil National Alliance
Tamil National Alliance Logo 2.jpg
தலைவர் இரா. சம்பந்தன் நாஉ
செயலாளர் மாவை சேனாதிராஜா நாஉ
பிரதித் தலைவர் அ. விநாயகமூர்த்தி நாஉ
பிரதிச் செயலர்(கள்) செல்வம் அடைக்கலநாதன் நாஉ
சுரேஷ் பிரேமச்சந்திரன் நாஉ
தொடக்கம் அக்டோபர் 20, 2001 (2001-10-20)
தலைமையகம் 6, 1வது ஒழுங்கை, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை
கொள்கை தமிழ்த் தேசியம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
13 / 225
மாகாணசபை உறுப்பினர்கள்
11 / 417
உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்
76 / 3,036
இணையத்தளம்
tnainfo.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (Tamil National Alliance) என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இக்கட்சி பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இக்கூட்டமைப்பில் இலங்கையின் மிதவாதத் தமிழக் கட்சிகள், மற்றும் முன்னாள் போராளிக் குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. 2001 ஆம் ஆண்டில் இருந்து இக்கூட்டமைப்பு தேர்தல்களில் பங்குபற்றி வருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சியை இக்கூட்டமைப்பு ஆரம்பத்தில் வலியுறுத்தி வந்திருந்தாலும், 2010 ஆம் ஆண்டில் சுயாட்சிக் கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய தன்னாட்சி அமைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.[1]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வாக தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆதரித்து வந்தது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை இலங்கை அரசாங்கமே செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பொருளடக்கம்

கூட்டமைப்பு உருவாக்கம் [தொகு]

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2001 அக்டோபரில் இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

  1. தமிழர் விடுதலைக் கூட்டணி
  2. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
  3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
  4. தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)

ஆகிய அரசியல் கட்சிகள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கின.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் இரா. சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகள் [தொகு]

2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் [தொகு]

2004 ஏப்ரல் 2 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6.84% வாக்குகளைப் பெற்று, 22 இடங்களைக் கைப்பற்றியது.

ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் Turnout ததேகூ நாஉ
அம்பாறை 55,533 19.13% 1 81.42% க. பத்மநாதன், இறப்பு 21 மே 2009
தோமஸ் தங்கதுரை வில்லியம், 12 சூன் 2009 இலிருந்து
மட்டக்களப்பு 161,011 66.71% 4 83.58% சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி
த. கனகசபை
தங்கேஸ்வரி கதிராமன்
கிங்க்ஸ்லி ராசநாயகம், ஏப்ரல் 2004 இல் பதவி துறப்பு
பா. அரியநேத்திரன், 18 மே 2004 இலிருந்து
யாழ்ப்பாணம் 257,320 90.60% 8 47.38% செல்வராஜா கஜேந்திரன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (அஇதகா)
சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்)
நடராஜா ரவிராஜ் (இதக), 10 நவம்பர் 2006 இல் படுகொலை
மாவை சேனாதிராஜா (இதக)
எம். கே. சிவாஜிலிங்கம் (ரெலோ)
கி. சிவநேசன், 6 மார்ச் 2008 இல் படுகொலை
பத்மினி சிதம்பரநாதன்
நல்லதம்பி சிறீகாந்தா (ரெலோ), 30 நவம்பர் 2006 இலிருந்து
சொலமன் சிரில், 9 ஏப்ரல் 2008 இலிருந்து
திருகோணமலை 68,955 37.72% 2 85.44% இரா. சம்பந்தன் (இதக)
க. துரைரெட்ணசிங்கம் (இதக)
வன்னி 90,835 64.71% 5 66.64% செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)
சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)
சதாசிவம் கனகரத்தினம்
சிவானந்தன் கிசோர்
வினோ நோகாராதலிங்கம் (ரெலோ)
தேசியப் பட்டியல் 2 எம். கே. ஈழவேந்தன், நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காததால் 14 டிசம்பர் 2007 இல் வெளியேற்றப்பட்டார்
ஜோசப் பரராஜசிங்கம் (இதக), 24 டிசம்பர் 2005 இல் படுகொலை
சந்திர நேரு சந்திரகாந்தன், 27 செப்டம்பர் 2006 முதல்
ரசீன் முகம்மது இமாம், 5 பெப்ரவரி 2008 முதல்)
மொத்தம் 633,654 6.84% 22 75.96%
Source:"Parliamentary General Election 2004, Final District Results". Department of Elections, Sri Lanka.

2010 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் [தொகு]

2010 ஏப்ரல் 8 இல் இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2.9% வாக்குகளைப் பெற்று, 14 இடங்களைக் கைப்பற்றியது.

ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள்

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் Turnout ததேகூ நாஉ
அம்பாறை 26,895 10.47% 1 64.74% பி. பியசேன
மட்டக்களப்பு 66,235 36.67% 3 58.56% பா. அரியநேத்திரன்
பொன் செல்வராசா
சீ. யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம் 65,119 43.85% 5 23.33% சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்)
ஈ. சரவணபவன்
மாவை சேனாதிராஜா (இதக)
சி. சிறீதரன்
அ. விநாயகமூர்த்தி
திருகோணமலை 33,268 23.81% 1 62.20% இரா. சம்பந்தன் (இதக)
வன்னி 41,673 38.96% 3 43.89% செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)
சிவசக்தி ஆனந்தன் (ஈபிஆர்எல்எஃப்)
வினோ நோகராதலிங்கம் (ரெலோ)
தேசியப் பட்டியல் 1 எம். ஏ. சுமந்திரன்
மொத்தம் 233,190 2.90% 14 61.26%
Source:"Parliamentary General Election – 2010". Department of Elections, Sri Lanka.

மேற்கோள்கள் [தொகு]

  1. Tamils give up on independence. 14 March 2010. Al Jazeera.

வெளி இணைப்புகள் [தொகு]