தமிழ் எழுத்துமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்
வகை அபுகிடா
மொழிகள் தமிழ், சௌராஷ்டிரம், சமஸ்கிருதம்
காலக்கட்டம் {{{time}}}
மூல முறைகள் பிராமி
 → தமிழ் பிராமி
  → வட்டெழுத்து
   → தமிழ்
ISO 15924 Taml
பிராமி எழுத்துமுறையும் அவற்றின் வழித்தோன்றல்களும்

பிராமி


தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதனை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும், ஆய்த எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.

மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள். தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.

பொருளடக்கம்

[தொகு] தமிழ் எழுத்துக்கள்

[தொகு] உயிரெழுத்துக்கள்

எழுத்து பெயர் சொல்
அகரம் அம்மா
ஆகாரம் ஆடு
இகரம் இலை
ஈகாரம் ஈட்டி
உகரம் உடை
ஊகாரம் ஊஞ்சல்
எகரம் எட்டு
ஏகாரம் ஏணி
ஐகாரம் ஐந்து
ஒகரம் ஒன்பது
ஓகாரம் ஓடம்
ஒள ஒளகாரம் ஒளவை
அஃகேனம் எஃகு

[தொகு] மெய்யெழுத்துக்கள்

எழுத்து பெயர் எழுத்தின் பெயர் சொல் உச்சரிப்பு
க் க் k க்கம் pakkam
ங் ங் ng சிங்கம் singkam
ச் ச் ch ச்சை pachchai
ஞ் ஞ் nj ஞ்சு panjchu
ட் ட் D ட்டு paTTu
ண் ண் N ண் kaN
த் த் t த்து pathu
ந் ந் nt ந்து pantthu
ப் ப் p ப்பு uppu
ம் ம் m ம்பு ampu
ய் ய் y மெய் mey
ர் ர் r பார் pAr
ல் ல் l ல்வி kalvi
வ் வ் v வ்வு kavvu
ழ் ழ் zh வாழ்வு vAzhvu
ள் ள் L ள்ளம் uLLam
ற் ற் R வெற்றி veTrRi
ன் ன் n ன்பு anpu
கிரந்த எழுத்துக்கள்
ஜ் - j ஜ்ஜி pajji
ஷ் - sh புஷ்பம் pushpam
ஸ் - s வாஸ்து vAstu
ஹ் - h அல்லாஹ் allah

[தொகு] உயிர்மெய்யெழுத்துக்கள்

கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது.

உயிர்மெய்யெழுத்துக்கள்
க் கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

[தொகு] தமிழ் எழுத்துக்களின் வரலாறு

தமிழ் எழுத்துக்களின் வரலாறு

[தொகு] தமிழ் எழுதும் முறைமை

தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலேப் பயன் படுத்தலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது.

[தொகு] தமிழ் எழுத்துக்களும் கணினியும்

[தொகு] மேலும் காண்க

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்