தமிழ் இணையச் சிற்றிதழ்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் இணையச் சிற்றிதழ்கள்
நூல் பெயர்: தமிழ் இணையச் சிற்றிதழ்கள்
ஆசிரியர்(கள்): தேனி மு. சுப்பிரமணி
வகை: கணினி மற்றும் இணையம்
துறை: இணைய இதழியல்
இடம்: 53, புதுத் தெரு
சிதம்பரம் 608 001
&
மணிவாசகர் பதிப்பகம்
31, சிங்கர் தெரு,
பாரிமுனை
சென்னை - 600 108
தொலைபேசி எண்: +91 - 44 -25380396
மொழி: தமிழ்
பக்கங்கள்: 96
பதிப்பகர்: மெய்யப்பன் பதிப்பகம்
பதிப்பு: நவம்பர் 2010

தமிழ் இணையச் சிற்றிதழ்கள், தேனி எம். சுப்பிரமணி எழுதிய நூல். இது கிரௌன் அளவில் 96 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

இந்நூலில் பின்வரும் 6 தலைப்புகளின் கீழ் உள்ளடக்கம் அமைந்துள்ளது:

  1. தமிழ் இணையச் சிற்றிதழ்கள் அறிமுகம்
  2. தமிழ் இணையச் சிற்றிதழ் உருவாக்கமும் உதவும் தொழில் நுட்பங்களும்
  3. தமிழ் இணையச் சிற்றிதழ்களின் உள்ளடக்கமும் வகைப்பாடும்
  4. தமிழ் இணையச் சிற்றிதழ்களின் நிறை - குறை
  5. தமிழ் இணையச் சிற்றிதழ்களின் வணிக நிலை
  6. இணையத்தில் தமிழ் படைப்புகள்

தமிழ் இணையச் சிற்றிதழ்கள் அறிமுகம்[தொகு]

இத்தலைப்பில் இணையம், இணைய இதழ்கள், வலைப்பூக்கள், சிற்றிதழ்கள், தமிழ் இணையச் சிற்றிதழ்கள் எனும் உள் தலைப்புகளில் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ் இணையச் சிற்றிதழ் உருவாக்கமும் உதவும் தொழில் நுட்பங்களும்[தொகு]

இத்தலைப்பில் இணையப் பக்க வடிவமைப்பு எனும் உள் தலைப்பில் பக்க வடிவங்கள், தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள், எழுத்துருக்கள், எழுத்துரு அமைப்புகள், படங்கள், கருத்துருக்கள் மற்றும் இணையப் பக்க அமைப்பு போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன. இணையதள அமைப்பு எனும் தலைப்பில் இணையதள இட வசதி, இணையதள முகவரி, கோப்பு மாற்ற நடைமுறை முகவரி போன்றவை குறித்த தகவல்களும், வலையேற்றம் எனும் உள் தலைப்பில் வலையேற்றம் குறித்த தகவல்களும் தரப்பட்டுள்ளன.

தமிழ் இணையச் சிற்றிதழ்களின் உள்ளடக்கமும் வகைப்பாடும்[தொகு]

இத்தலைப்பில் உள்ளடக்கம் எனும் உள் தலைப்பில் ஆன்மிகம், சமூகம், அரசியல், ஆய்வு, பகுத்தறிவு, சமையல் என்பது போன்ற 23 தலைப்புகளில் குறிப்புகளும் சில இணைய இதழ்கள் மற்றும் வலைப்பூக்களின் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளன. இணைய இதழ்கள் புதுப்பிக்கப்படு கால அளவுகள் குறித்த தகவல்கள் கால அளவுகள் எனும் உள் தலைப்பிலும், உள்ளடக்கத்திலிருக்கும் கருத்துக்களின் தன்மைகளுக்கேற்ப தரம், நடுத்தரம், தரமில்லாதவை என்பது போன்று வகைப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் உள்ளன.

தமிழ் இணையச் சிற்றிதழ்களின் நிறை - குறை[தொகு]

இத்தலைப்பில் தமிழ் இணையச் சிற்றிதழ்களின் படைப்புகள், தொழில்நுட்பம், சமுதாயம் என்கிற உள் தலைப்புகளில் நிறை-குறைகள் தரப்பட்டுள்ளன.

தமிழ் இணையச் சிற்றிதழ்களின் வணிக நிலை[தொகு]

இத்தலைப்பில் விளம்பரங்கள், இணைய விளம்பர அமைப்புகள், தமிழ் இணையச் சிற்றிதழுக்கான விளம்பரங்கள், தமிழ் மொழி விளம்பரக் குறைபாடுகள், இலவச வரி விளம்பரம், சந்தா, மாற்று வணிக வழிகள் போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இணையத்தில் தமிழ் படைப்புகள்[தொகு]

இத்தலைப்பில் இணையத்தில் எழுதுவது எளிது, தமிழ் இணைய இதழ்கள், தமிழ் வலைப்பூக்கள், தமிழ் மடலாடற்குழுக்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள், தமிழ் இணைய வளர்ச்சி போன்ற உள் தலைப்புகளில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]