தமிழ்நாட்டுக் குடிவரவாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேறு பிரதேசங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வசிப்பவர்களை தமிழ்நாட்டுக் குடிவரவாளர்கள் எனலாம். இவர்களை இருவகைப்படுத்தலாம். இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு குடிவந்தவர்கள்; வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு குடிவந்தவர்கள். குடிவரவாளர்களை இழிவாக "வந்தேறிகள்" என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு.

தமிழ்நாட்டுக் குடிவரவாளர் வரலாறு[தொகு]

தமிழர்களே ஆபிரிக்காவில் இருந்து வெளிக்கிட்டு மத்திய ஆசியவினூடாக வட இந்தியா வந்து பின்னர் அங்கிருந்து தென் இந்தியாவிற்கு பரிவியதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1]

தமிழ்நாட்டின் நீண்ட வரலாற்றில் பலதரப்பட்ட மக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குடியமர்ந்தனர். வடநாட்டில் இருந்து வந்த "அந்தணர்கள்", நாயக்கர்கள் போன்றோர். கடல்மூலமாக வந்த வணிக நோக்கமாக வந்த முகமதியர்கள் பலரும் தமிழ்நாட்டில் தங்கினர்.

இன்றும் தமிழ்நாட்டில் குடிவரவாளர்கள் வர்த்தகம், பாதுகாப்பு, நல்வாழ்வு தேடி பலர் குடிவருகின்றார்கள். தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Genegraphic Project". Archived from the original on 2006-11-13. பார்க்கப்பட்ட நாள் 2006-10-31.

வெளி இணைப்புகள்[தொகு]