தமிழ்நாட்டுக் காலநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் காலநிலை, மழைக்காலத்தை தவிர்த்து, பொதுவாக வெப்பமானது. கோடைகாலம் என்பது ஏப்ரல் முதல் சூன் வரையாகும். மாநிலத்தின் அதிகமான வெப்பம், மே மாதத்தில் பதிவுசெய்யப்படும். குளிர் காலம் என்பது நவம்பர் முதல் பிப்ரவரி வரையாகும். நீலகிரியில் குளிர் காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை -2°சி வரை இருக்கும்[சான்று தேவை]. குளிர் காலத்தில் கொடைக்கானலின் சராசரி வெப்பநிலை +8.3°சி

மழைக் காலம்[தொகு]

மழைக் காலம் என்பது சூன் முதல் டிசம்பர் வரையாகும்.

மழை காலம் அளவு(மிமீ)[1]
தென்மேற்குப் பருவமழை சூன் முதல் செப்டம்பர் 332.9
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் 459.2

நீலகிரி மாவட்டம் அதிகப்படியான மழைபெறும் மாவட்டம் ஆகும். சின்ன கல்லாறு (வால்பாறை அருகில்) மற்றும் தெவல்லா (நீலகிரி மாவட்டம்) ஆகியவை தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் ஊர்கள்[சான்று தேவை]. சின்னக் கல்லாற்றில் 400 சென்டிமீட்டர் அளவு மழை கிடைக்கும்.

குற்றாலம் அதிக மழை பெறும் ஊர்களில் ஒன்று. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 1116 மில்லி மீட்டர் மழை பெய்யும்[2]. அகஸ்திய மலையில் 5000 மிமீ வரை மழை பெய்யும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தமிழ்நாடு வேளாண்மைத் தொழிற்துறை
தமிழ்நாடு இலத்திரனியல் தொழிற்துறை

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of Tamil Nadu
  2. Climate: Kutralam
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டுக்_காலநிலை&oldid=2993712" இலிருந்து மீள்விக்கப்பட்டது