தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை
தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 40 550 382 சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இவர்களில் 39214721 உள்ளூர் பயணிகள் 1335661 வெளியூர் பயணிகள்.[1]
பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.
தமிழ்நாடு பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும்.
பொருளடக்கம் |
தமிழ்நாட்டில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள் [தொகு]
தமிழ்நாட்டில் யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட ஐந்து உலக பாரம்பரியக் களங்கள் உண்டு. மூன்று சோழர் கோயில்களையும் ஒரு தொகுதியாக வகைப்படுத்தப்படுவதுண்டு.
தமிழர்களும் தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையும் [தொகு]
உலகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் தமது பண்பாட்டு மூலங்களை அறிய தமிழ்நாட்டுக்கு வருகின்றார்கள். மேலும் தமிழ்நாட்டின் பெரும்பான்மைப் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர்காரர்களே.
சுற்றுலா ஈர்ப்புகள் [தொகு]
- சென்னைச் சங்கமம் - http://www.chennaisangamam.com/
- சென்னை அறிவியல் விழா - http://www.sciencefestival.in/
- அரசு அருங்காட்சியகம் (சென்னை) - http://www.chennaimuseum.org/
- வள்ளுவர் கோட்டம்
- திருவள்ளுவர் சிலை
- தமிழ்நாட்டுக் கோயில்கள்
- தாவரவியல் பூங்கா, ஊட்டி.
- முதுமலை வன விலங்குகள் சரணாலயம்.
- பரம்பிக்குளம் - ஆழியார்.
- ஆனைமலை வன விலங்குகள் சரணாலயம்.
- சிறுவாணி நீர் வீழ்ச்சி.
- பிளாக் தண்டர், மேட்டுப்பாளையம்.
- தாவரவியல் பூங்கா (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகம்).
- வனவியல் கல்லூரி அருங்காட்சியகம்.
- ஜி.டி.நாயுடு தொழில் பூங்கா.
- டாப் ஸ்லிப், மூணார், ஆசனூர், ஊட்டி, குன்னூர்.
- வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்