தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் அதிகாரப்பூர்வ கொடி

தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலரால் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் தமுமுக அரசியல் கட்சியாக செயல்படுகிறது அது ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு தடங்கலாக உள்ளது என்கிற குற்றச்சாட்டுகளுடன் பிரிந்து வந்து இந்த அமைப்பை உருவாக்கியது. தங்களுக்கென்று பச்சை வெள்ளை கருப்பு கொடியுடன் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் அரசியல் சார்ந்த விவகாரங்களில் மட்டும் தலையிட்டு செயல்பட்டு வருகிறது. அமைப்பின் அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு எவரும் தேர்தலில் (வார்டு தேர்தல் உட்பட) போட்டியிடக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டுள்ளது. நஜ்ஜாத் அல்லது ஏகத்துவவாதிகள் என்று அழைக்கக்கூடியவர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டு தஃவா எனும் ஓரிறை அழைப்புப் பணியை செய்து வருகிறது.

பின்னர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சிலர் இந்த அமைப்பிருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட அவர்கள் பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னும் புதிய அமைப்பை துவங்கினர்.

பொருளடக்கம்

[தொகு] சமூகப்பணிகள்

அதிக எண்ணிக்கையில் இரத்ததானம் செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை குவித்துள்ளது. குறிப்பாக மாநில அளவில் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் இரத்த தானம் செய்வதில் கடந்த ஏழு ஆண்டுகளாக மாநில அளவில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.[சான்று தேவை]

பல்வேறு அரபு நாடுகளில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிருக்கும் தமிழ் முசுலீம்களை நிர்வாகிகளாகக் கொண்டு கிளைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ரமதான் மற்றும் ஏனைய காலங்களிலும் ஜகாத், கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் ஏனைய தர்மங்களை அங்குள்ள தமிழக மக்களிடமிருந்து பெற்று தமிழகத்தில் இயங்கும் தலைமை அலுவலகத்தின் மூலம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

இரத்த தானம், கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இசுலாமிய சொற்பொழிவுகளையும் நடத்தி வருகிறது. தேர்தல் மற்றும் பொது பிரச்சினைகளில் முசுலீம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையிலான பள்ளிவாசல்களை தமிழகம் முழுவதும் அமைத்து பராமரித்து வருகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசில் முசுலீம்களுக்கு இடஒதுக்கீடை வழங்க பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி மாநில அளவில் 3.5 % இடஓதுக்கீடை பெற்றுதந்த இயக்கங்களுள் இதுவும் ஒன்று.

[தொகு] தப்லீக் ஜமாத்துடன் உள்ள பொதுவான பிணக்குகள்

[தொகு] தமுமுகவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் பிணக்குகள்

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி