தமிழர் விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழர் விளையாட்டுக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழர்களால் வழிவழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுபவை. மேலும் பல உலகமெங்கும் விளையாடப்படுபவை. மட்டைப்பந்து, உதைப்பந்து என தெளிவாக வெளி நாடுகளில் தோன்றிய அனைத்துலக விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுக்களுக்குள் வகைப்படுத்தபடவில்லை. இவற்றை பல்வேறு பண்புகளின் அடிப்படைகளில் வகைப்படுத்தலாம்.

தொன்மகால விளையாட்டுக்கள்[தொகு]

தற்காப்பு/ஆடற் கலைகள்[தொகு]

வெளிக்கள விளையாட்டுக்கள்[தொகு]

உள்ளக விளையாட்டுக்கள்[தொகு]

ஆடவர் விளையாட்டுகள்[தொகு]

ஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புறவிளையாட்டுகளாகவே (outdoor games) உள்ளன.

  • ஜல்லிக்கட்டு
  • பாரிவேட்டை
  • சிலம்பம்
  • புலிவேடம்
  • சடுகுடு
  • இளவட்டக்கல்
  • ஓட்டம்
  • இரட்டை மாட்டுப் பந்தயம்
  • மோடி விளையாட்டு
  • உரிமரம் ஏறுதல்
  • பானை உடைத்தல்
  • உறிப்பானை விளையாட்டு
  • சூதுதாயம்
  • வாய்ப்புநிலை விளையாட்டுகள்
  • அறிவுத் திறன் விளையாட்டுகள்

இவை ஆகியன ஆடவர் விரும்பி ஆடும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.

மகளிர் விளையாட்டுகள்[தொகு]

மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவே (Indoor games) உள்ளன.

இவை பொதுவாக மகளிர் பங்கேற்கும் முக்கிய விளையாட்டுகளாகும்.

சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள்[தொகு]

எலியும் பூனையும், சோளக்கதிர், சிறுவீடு, குலைகுலையாய் முந்திரிக்காய் ஆகியன சிறுவர் சிறுமியர் சேர்ந்து பங்கு கொள்ளும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.

சிறுவர் விளையாட்டுகள்[தொகு]

கிட்டிப்புள், குத்து விளையாட்டு, பச்சைக் குதிரை, குத்துப் பம்பரம், குண்டு விளையாட்டு, எறிபந்து, காற்றாடி, பட்டம், வண்டியுருட்டுதல், பூச்சி விளையாட்டு, மரங்கொத்தி முதலியன சிறுவரின் முக்கிய விளையாட்டுகளாகும்.

சிறுமியர் விளையாட்டுகள்[தொகு]

சில்லி, சோற்றுப்பானை, கும்மி, திரிதிரி, கண்கட்டி விளையாடுதல், மலையிலே தீப்பிடிக்குது, தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல் முதலியன சிறுமியரின் முக்கிய விளையாட்டுகளாகும்.

குழந்தை விளையாட்டுகள்[தொகு]

உச்சரிப்பு விளையாட்டு, வினா விடைச் சங்கிலி, பருப்புக் கடைதல் ஆகியன கிராமபுற குழந்தைகள் பங்கு பெறும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.

விளையாட்டு வகைகள்[தொகு]

புனல் விளையாட்டு[தொகு]

நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் இதில் அடங்கும்.

பந்து[தொகு]

பழங்காலத்தில் ஆண்கள் தேங்காய் நார் , பஞ்சு , சிறிய அளவிலான இரும்பு களிமண் முதலியவற்றில் ஆடினர். பெண்கள் பூக்களைக் கொண்டு ஆடினர். குதிரையில் பயணம் செய்தும் பந்து விளையாடினர். இப்போது விளையாடும் போலோ என்கிற விளையாட்டு இந்த வகையைச் சார்ந்தது.

அசதியாடல்[தொகு]

ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்து விளையாடுவது

அம்மானை[தொகு]

பெண்கள் குழுக்களாக வினா, விடைகளை பாடல்களாகப் பாடப்படுவது அம்மானை. பாடலின் முடிவில் அம்மானை என்ற சொல் இடம் பெற வேண்டும்.

ஊஞ்சல்[தொகு]

ஊஞ்சல் விளையாட்டு. ஆலம் விழுது முதல் அம்பொன் வரை விளையாட்டுக் கருவிகளாக பயன்பட்டன.

கழங்கு[தொகு]

ஒரு காயைத் தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம். புளியங்காய், சிறு கற்கள் முதலியன கொண்டு ஆடப்படுவது. ===== # தலைப்பு

  1. கூழாங்கற்களைத்தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம் 5,7,9,11 கற்களை பயனபடுத்துவர்.=====

கண் புதைந்து ஆடுதல்[தொகு]

இன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது

கறங்கு[தொகு]

கறங்கு என்றால் சுழற்சி. பனை ஓலையை சீவி வெட்டி காற்றாடி போல செய்து காற்று வரும் திசையை நோக்கி ஓடினால் விசிறியைப் போல சுழற்றிக் கொண்டு விளையாடுவது.

குரவை[தொகு]

பெண்கள் வட்டமாக கை கோர்த்து பாடி ஆடுவது

சிறு சோறாக்கல்[தொகு]

கூட்டாஞ் சோறு ஆக்கல்

சிற்றில் செய்தல்[தொகு]

கடல் அல்லது ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுதல்

வட்டு[தொகு]

பொருளை உருட்டி விளையாடும் ஆட்டம் ( தாயம் போல)

ஏறுகோள்[தொகு]

ஜல்லிக்கட்டு

வள்ளை[தொகு]

உரலில் ஒரு பொருளைக் குத்திக் கொண்டு பாடும் ஒரு விளையாட்டு

சதவி[தொகு]

பட்டம் விளையாடுதல் போன்ற ஒரு விளையாட்டடு

தமிழ் குழந்தை விளையாட்டுக்கள்[தொகு]

நூல்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம்.
  • சு.சிவகாமசுந்தரி எழுதிய “சங்க இலக்கிய விளையாட்டுகளஞ்சியம்” நூல் (நியு செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை வெளியீடு)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_விளையாட்டுகள்&oldid=3508243" இலிருந்து மீள்விக்கப்பட்டது