தமிழச்சியின் கத்தி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழச்சியின் கத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழச்சியின் கத்தி (நூல்)  
தமிழச்சியின் கத்தி முதற்பக்கம்
எழுதியவர் {{{எழுதியவர்}}}
Genre(s) கற்பனைக் கவிதைத் தொகுப்பு
Publisher பாரதிதாசன் பதிப்பகம் மற்றும் பாவை பதிப்பகம்
Publication date 1949 மற்றும் 2009
ISBN 81-7735-773-5

தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது.

கதைச் சுருக்கம்[தொகு]

அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் காணுகிறார்கள் என்று இக்கவிதை தொகுப்பு ஆரம்பமாகிறது.

உசாத்துணைகள்[தொகு]