தப்பிப்பிழைத்தல் திறன்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தப்பிப்பிழைத்தல் திறன்கள் என்பவை ஆபத்தான நிலைமையை ஒருவர் சமாளிக்கப் பயன்படும் திறன்கள் ஆகும். போர், பயங்கரவாத தாக்குதல்கள், இயற்கை அழிவுகள், விபத்துக்கள் என பல காரணங்கள் ஒருவரை அல்லது ஒரு குழுவை ஆபத்தான நிலைமைக்கு இட்டுச் செல்லாம். தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, வாழ் ஆதாரங்களான நீர், உணவு, உறையுள், மருந்து, நெருப்பு ஆகியவற்றைப் பெறுவதை தப்பிப்பிழைத்தல் திறன்கள் நோக்காக கொண்டவை.
பொருளடக்கம் |
[தொகு] மனித எல்லைகள்
மனிதர் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மிக் கடுமையான குளிரைத் தாங்க முடியாது. மனிதர் மூன்று நாட்களுக்கு மேல் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. மனிதர் மூன்று கிழைமைகளுக்கு மேலாக உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது.