தனியார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனியார் கோயில் எனப்படுவது தனிநபர் முன்னின்று குறிப்பிடத்தக்க பணம் முதலீடு செய்து ஒரு கோயிலை உருவாக்கி நிர்வாகிப்பது ஆகும். இந்த கோயில் பொதுக் கோயிலில் இருந்து சட்ட நிர்வாக வழிகளில் பெரிதும் வேறுபடுகிறது. பொதுக் கோயிலின் சொத்துரிமை பொதுவாக ஒரு அறக்கட்டளையிடம் இருக்கும். பொதுக் கோயில் நிர்வாகம் அறங்காவலர் சபையிடம் இருக்கும். தனியார் கோயிலின் சொத்துரிமை ஒரு தனிநபரிடம் இருக்கும். நிர்வாக செயலதிகாரமும் பொதுவாக தனிநபரிடம் இருக்கும். தனியார் கோயில்கள் பொதுக் கோயில்கள் போலவே பத்கர்களிடம் இருந்து அன்பளிப்பு பெறுவதும் வழமையே.

தமிழர் குடியேறிய மேற்குநாடுகளில் பெரும்பான்மை கோயில்கள் தனியார் கோயில்களே. இவை வணிக நிறுவனங்கள் போன்று இலாபத்தை குறிவைத்து நடத்தப்படுகின்றன என்ற விமர்சனமும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனியார்_கோயில்&oldid=1831879" இலிருந்து மீள்விக்கப்பட்டது