தனிச்சுழி வெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராபர்ட் பாயில் - தனிச்சுழி வெப்பநிலை என்ற கருத்துருவை முன்வைத்தவர்

தனிச்சுழி வெப்பநிலை (absolute zero) என்பது கருத்தியலில் மட்டுமே எட்டப்படக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலை ஆகும். எனவே ஒரு அமைப்பின் மிகக்குறைந்த மொத்த ஆற்றலும் இந்த வெப்பநிலையிலேயே எட்டப்படும் என்று கருத்தியல் இயற்பியலில் கூறப்படுகிறது.[1]இது −273.15 °C அல்லது 0 கெல்வினுக்குச் சமம்.

வெப்பஇயங்கியல் விதிகளின் படி தனிச்சுழி வெப்பநிலை என்பது இயற்கையிலோ செயற்கையிலோ எட்டவே இயலாத ஒன்றாகும். 100 விழுக்காடு பயனுறுதிறன் உடைய இயந்திரம் அல்லது இடையறா இயக்கம் இல்லை என்பதைப் போன்றதே இதுவும். எனினும் தனிச்சுழி வெப்பநிலைக்கு அண்மையிலுள்ள வெப்பநிலைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


தனிச்சுழி வெப்பநிலையில் அனைத்து இயக்கங்களும் நின்று விடும் என்று எண்ணத் தோன்றினாலும் ஐசன்பர்க்கின் ஐயப்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் சுழிப்புள்ளி ஆற்றல் (zero point energy /அடிமட்ட ஆற்றல்) என்றழைக்கப்படும் எஞ்சிய இயக்க ஆற்றல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

குறிப்புதவி [தொகு]

  1. [1] daviddarling


"http://ta.wikipedia.org/w/index.php?title=தனிச்சுழி_வெப்பநிலை&oldid=1356164" இருந்து மீள்விக்கப்பட்டது