தங்கப் பந்து (பிஃபா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தங்கப் பந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதல் மூன்று தங்கப் பந்து (பிஃபா) விருதுகளைப் பெற்ற லியோனல் மெஸ்ஸி
சூலை,2010-இல் தங்கப் பந்து (பிஃபா) விருதை உருவாக்கியதற்கான ஒப்பந்தத்துடன் ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர். இடம்: ஜோகானஸ்பேர்க்

பிஃபா தங்கப் பந்து (FIFA Ballon d'Or,பிரெஞ்சு உச்சரிப்பு: ​[balɔ̃ dɔʁ], பிஃபா பாலோன் தி'ஓர்) என்பது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரருக்கு ஃபிஃபாவினால் வழங்கப்படும் பரிசாகும். பரிசளிக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் உலகிலேயே மிகச் சிறந்த அளவில் விளையாடிய வீரருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கென சிறப்பாக ஓட்டெடுப்பு நடைபெறும்; இதில் உலகின் தேசிய அணிகளின் தலைவர்களும், பயிற்சியாளர்களும் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓட்டளிப்பர். [1][2]

பிரெஞ்சுக் கால்பந்தின் பாலோன் தி'ஓர் மற்றும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளையும் ஒன்றிணைத்து 2010-முதல் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒன்றிணைப்புக்குப் பின்னர் முதன்முதலில் இவ்விருதை வென்றவர் லியோனல் மெஸ்ஸி ஆவார். அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளும் இவரே இவ்விருதைக் கைப்பற்றினார். 2013-க்கான தங்கப் பந்து (பிஃபா) விருதை வென்றவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 2010-இல் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருதை, பாலோன் தி'ஓருடன் இணைத்த பின்னர், பெண்களுக்கு மட்டும் ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்படுகிறது.

வெற்றியாளர்கள்[தொகு]

2010 வரை, உலகின் சிறந்த காற்பந்தாட்ட வீரருக்கு பிரெஞ்சுப் புட்பாலின் பாலோன் தி'ஓர் அல்லது ஃபிஃபா உலகின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வந்தது.
ஆண்டு முதல்வர் இரண்டாமவர் மூன்றாமவர்
2010 அர்கெந்தீனா லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) எசுப்பானியா ஆந்த்ரெ இனியஸ்தா (பார்சிலோனா) எசுப்பானியா சேவியர் எர்னாண்டசு (பார்சிலோனா)
2011 அர்கெந்தீனா லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) போர்த்துகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) எசுப்பானியா சேவியர் எர்னாண்டசு (பார்சிலோனா)
2012 அர்கெந்தீனா லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) போர்த்துகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) எசுப்பானியா ஆந்த்ரெ இனியஸ்தா (பார்சிலோனா)
2013 போர்த்துகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மாட்ரிட்) அர்கெந்தீனா லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா) பிரான்சு பிராங்க் ரிபெரி (பேயர்ன் மியூனிக்)

விளையாட்டு வீரர்களின் வெற்றிகள்[தொகு]

விளையாட்டாளர் முதலிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
1 அர்கெந்தீனா லியோனல் மெஸ்ஸி 4 2 0
2 போர்த்துகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 3 0
3 எசுப்பானியா ஆந்த்ரெ இனியஸ்தா 0 1 1
4 எசுப்பானியா சேவியர் எர்னாண்டசு 0 0 2
5 பிரான்சு பிராங்க் ரிபெரி 0 0 1

நாடுகள் பெற்ற வெற்றிகள்[தொகு]

நாடு முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
1  அர்கெந்தீனா 4 (2010, 2011, 2012,2014) 1 (2013,2014) 0
2  போர்த்துகல் 2 (2013,2014) 2 (2011, 2012,2013) 0
3  எசுப்பானியா 0 1 (2010) 3 (2010, 2011, 2012)
4  பிரான்சு 0 0 1 (2013)

காற்பந்துக் கழகங்களின் வெற்றிகள்[தொகு]

காற்பந்துக் கழகம் முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
1 எசுப்பானியா பார்சிலோனா 3 (2010, 2011, 2012) 2 (2010, 2013) 3 (2010, 2011, 2012)
2 எசுப்பானியா ரியல் மாட்ரிட் 1 (2013) 2 (2011, 2012) 0
3 செருமனி பேயர்ன் மியூனிக் 0 0 1 (2013)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கப்_பந்து_(பிஃபா)&oldid=3669538" இலிருந்து மீள்விக்கப்பட்டது