தக்கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தக்கலை | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | எஸ்.நாகராஜன் |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று தக்கலை (Thuckalay). இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டத்தின் தலைநகரமாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை 47 ல் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் [தொகு]
இதன் அருகிலுள்ள பத்மனாபபுரம் அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது. இவ்வூரின் அருகில் குமாரகோவில் என்ற இடத்தில் நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி எனும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள்.