டோமாரி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டோமாரி | ||
|---|---|---|
| நாடுகள்: | ஆப்கனிஸ்தான், எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், மேற்குக்கரை மற்றும் காசா, ஜோர்தான், லிபியா, ரஷ்யா, சூடான், சிரியா, துருக்கி | |
| பேசுபவர்கள்: | ஈரான்: 1,338,271 ஈராக்: 439,230 |
|
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய இந்திய-ஐரோப்பியம் இந்திய-ஈரானியம் இந்திய-ஆரியம் நடு வலயம் டோமாரி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | inc | |
| ISO/FDIS 639-3: | rmt | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
டோமாரி மொழி (Domari) ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். இது ரோமானி, ராஜஸ்தானி, கிழக்குப் பஞ்சாபி ஆகியவற்றுக்கு நெருக்கமானது. இது மத்திய கிழக்கைச் சேர்ந்த டொம் எனப்படும் மக்கள் குழுவினரால் பேசப்படுகின்றது. இவர்கள் ஈரான், ஈராக், எகிப்து, துருக்கி, பாலஸ்தீனம் / இஸ்ரேல், ஆகிய பகுதிகளில் பரந்துள்ளனர். அராபியப் பகுதிகளில் இதற்கெனத் தனி எழுத்து வடிவம் கிடையாது. சமயங்களில் இது அரபி எழுத்துக்களில் எழுதப்படுவது உண்டு. இம் மொழியில் ஏராளமான அரபி, பாரசீகச் சொற்கள் காணப்படுகின்றன.
அரபி மொழியில் இம்மொழியை நவாரி என அழைக்கின்றனர். இச்சொல் ஒரு இழிவு படுத்தும் சொல்லாகக் கருதப்படலாம்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- ரோமானி திட்டத்திலிருந்து டோமாரி பற்றிய விளக்கம் (ஆங்கிலத்தில்)
- டோமாரி கற்றல் - டொம் ஆய்வு மையத்திலிருந்து. (ஆங்கிலத்தில்)