டோப்பலோவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முழுப் பெயர் | Veselin Topalov (Веселин Топалов) |
|
| நாடு | ||
| பிறப்பு | 15 மார்ச்சு 1975 Rousse, Bulgaria |
|
| பட்டம் | Grandmaster | |
| உலக சாம்பியன் | 2005–2006 (FIDE) | |
| FIDE தரவுகோல் | 2812 (No. 2 in the May 2010 FIDE World Rankings) |
|
| எலோ தரவுகோள் | 2813 (October 2006, July 2009) | |
வெசலின் டோபலோவ் (பி. 15 மார்ச் 1975), ஒரு பல்கேரிய நாட்டு சதுரங்க ஜீயெம் (grandmaster) ஆவார். பீடே உலக சதுரங்க தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்; [1] உலக சதுரங்கப் போட்டி 2010-இல் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இவர் 2005- ஆம் ஆண்டு பீடே உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று பீடே உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்; 2006-இல் நடந்த உலக சதுரங்கப் போட்டியில் விளாடிமிர் கிராம்னிக்கிடம் தோற்றதன் மூலம் அப்பட்டத்தை இழந்தார். 2005- ஆம் ஆண்டு சதுரங்க ஆஸ்கர் விருதைப் பெற்றார். [2]
பீடே உலக சதுரங்க தரவரிசையில் அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்தவர்கள் பட்டியலில் காசுபரோவ், கார்ப்போவ், பாபி ஃபிசர் ஆகியோருக்கு அடுத்துள்ளார் (27 மாதங்கள்).
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Veselin Topalov Ratings progress, FIDE
- ↑ "Chess Oscar 2005 for Veselin Topalov". ChessBase