லேடி டோக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டோக் பெருமாட்டி கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லேடி டோக் கல்லூரி அல்லது டோக் பெருமாட்டி கல்லூரி (Lady Doak College ) என்பது தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி ஆகும். அமெரிக்க கிறித்துவ மிசனரியைச் சேர்ந்த கேத்தி வில்காக்ஸ் என்ற பெண்மணியால் 1948ஆம் ஆண்டு தல்லாகுளம் அருகே இக்கல்லூரி தொடங்கப்பட்டது. மதுரை மில் உரிமையாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சர். டோக் மற்றும் லேடி டோக் இருவரது உதவியையும் கேத்திவில்காக்ஸ் அம்மையார் பெற்று இக்கல்லூரியை தொடங்கினார். கல்லூரி தொடங்க பெரும் உதவி செய்த டோக் பெருமாட்டி பெயராலேயே இக்கல்லூரி அழைக்கப்படுகிறது [1]. 1978ஆம் ஆண்டு தன்னாட்சி தகுதியினைப் பெற்றது. தற்போது கேத்தி வில்காக்ஸ் கல்வி கூட்டமைப்பின் அங்கமாக இயங்கி வருகிறது.

81 மாணவிகள் கொஞ்சம் நூல்கள் அடங்கிய சிறிய நூலகம், ஒரு விடுதியுடன் தொடங்கிய இந்தக் கல்லூரி இன்று 5048 மாணவிகள், 255 ஆசிரியைகள், 170 ஆசிரியரல்லாத அலுவலர்களையும் கொண்டு செயல்படும் நிலைக்கு வளர்ந்துள்ளது. 26 இளநிலை படிப்புகள், 15 முதுநிலைப் படிப்புகள், 9 ஆய்வியல் நிறைஞர் படிப்புகள், 3 முதுகலை பட்டய படிப்புகள், 2 பட்டய படிப்புகள் மற்றும் 1 சான்றிதழ் படிப்புகளையும் கொண்டுள்ளது.[2] இக்கல்லூரியின் ஜே. எக்ஸ். மில்லர் நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளதாக கல்லூரி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெண் கல்வியின் முன்னேற்றத்திற்க்கு லேடி டோக் கல்லூரி முதன்மையானது என்பதை உணர்ந்த வி. வி. சி. ஆர். முருகேச முதலியார் ஆறாயிரம் தங்க பொற்காசுகளை நன்கொடையாக இக்கல்லூரிக்கு வழங்கினார்.[3] 

பழைய மாணவர்[தொகு]

  • சாலினி இளந்திரையன், முதல்வர் - தமிழ்ப் பேராசிரியர், திருவேங்கடவன் கல்லூரி, புதுதில்லி.
  • முனைவர். மெர்ஸி புஷ்பலதா - முன்னாள் கல்லூரி முதல்வர்

மேற்கோள்கள்[தொகு]

1.எனது மதுரை நினைவுகள் - மனோகர் தேவதாஸ்

2. டோக்பெருமாட்டி கல்லூரி கையேடு 2015 - 2016

வெளி இணைப்புகள்[தொகு]

  1. [1]
  2. [2]
  3. (in தமிழ்) வித்தியா வாணி 2019 ஜூலை மலர். விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019. https://archive.org/details/vidyavaani_july2019/page/n9/mode/1up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேடி_டோக்_கல்லூரி&oldid=3781707" இலிருந்து மீள்விக்கப்பட்டது