டைசல் உயிரித் தொழில்நுட்ப பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டைசல் உயிரித் தொழில்நுட்பப் பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டைசல் உயிரித் தொழில்நுட்ப பூங்கா
பொதுவான தகவல்கள்
இடம்சென்னை தமிழ் நாடு இந்தியா
முகவரிடைசல் உயிர் தொழில் நுட்ப பூங்கா, சி.எஸ்.அய்.ஆர் சாலை, தாரமணி, சென்னை 600 113.
உரிமையாளர்டைசல் உயிர்த் தொழில் நுட்ப பூங்கா

டைசல் உயிரித் தொழில் நுட்ப பூங்கா (Ticel Biotech park) தமிழ்நாட்டில், சென்னை மாநகரின் தென்பகுதியில் தரமணி என்னும் இடத்தில் உள்ளது. இங்கு செல்வதற்கு தரமணியில் உள்ள ராசீவ் காந்தி சாலையிலிருந்து வலது பக்கமாக திரும்பிச் செல்ல வேண்டும். இதன் அருகில் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரமணி வளாகம், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் கூடங்கள், டைடல் பார்க், அசென்டாசு தகவல் தொழில்நுட்ப பூங்கா (Ascendas IT park) ஆகியவை உள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவிலும், சென்னைத் துறைமுகத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும் இது உள்ளது.

இக்கட்டிடம் நவம்பர் மாதம் 2004ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இப்பூங்கா, செப்டம்பர் மாதம் 2000ம் ஆண்டு உயிரித் தொழில்நுட்பக் கொள்கையின் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. உயிரித் தொழில்நுட்ப பரிசோதனை மையம் இங்கு உலக தரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கட்டிடம் தமிழ் நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தால் கட்டி முடிக்கப்பட்டது. இந்தியன் வங்கி, கரூர் வைசியா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கிகள் துணை-அமைப்பாளர்களாக (Co-promoters) உள்ளனர்[2].

பயன் நுகர்வோர் பட்டியல்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. www.ticelpark.com
  2. "Ticelbiopark Ltd". பார்க்கப்பட்ட நாள் August 6, 2013.