டைகர் ஏர்வேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டைகர் ஏர்வேசு சிங்கப்பூர்
ஐஏடிஏ
TR
ஐசிஏஓ
TGW
கால்சைன்
GO CAT
நிறுவல் 2003
வான்சேவை மையங்கள் சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்
வானூர்தி எண்ணிக்கை 20
சேரிடங்கள் 28
மகுட வாசகம் உண்மை விலையைப் பெற்றிடு
தாய் நிறுவனம் டைகர் ஏர்வேசு ஹோல்டிங்சு
தலைமையிடம் சிங்கப்பூர்
முக்கிய நபர்கள் கோயே பெங் யென் (மு.செ.அ)(9 ஆகத்து 2012 முதல்)[1][2]
இணையத்தளம் www.tigerairways.com
சிங்கப்பூரின் சாங்கி வானூர்தி நிலையத்திலிருந்து எழும்பும் டைகர் ஏர்வேசின் வானூர்தி ஒன்று.

டைகர் ஏர்வேசு சிங்கப்பூர் (Tiger Airways Singapore)எனச் சேவை புரியும் டைகர் ஏர்வேசு சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் (Tiger Airways Singapore Pte Ltd) நிறுவனம் ஓர் குறைந்த கட்டணச்சேவை வான்பயணச் சேவையாளராகும். இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது. இது தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, சீனா, இந்தியா ஆகியவற்றில் உள்ள மண்டல சேரிடங்களுக்கு வான்பயணச் சேவைகளை வழங்குகிறது. இதன் முதன்மை விமானத்தளமாக சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் உள்ளது.

இதன் தலைமை அலுவலகம் சாங்கி வணிகப் பூங்கா சென்ட்ரல் 1இல் ஹனிவெல் கட்டிடத்தில் அமைந்துள்ளது.[3] சிறந்த குறைந்த கட்டண சேவையாளராக 2006இலும் 2010இலும் விருதுகள் பெற்றுள்ளது.

சேரிடங்கள்[தொகு]

டைகர் ஏர்வேசு கீழ்காணும் இடங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது :

வானூர்தி தொகுதி[தொகு]

மார்ச்சு 31, 2013நிலவரப்படி டைகர் ஏர்வேசின் தொகுதியில் கீழ்வரும் வானூர்திகள் உள்ளன:[4]

டைகர் ஏர்வேசு சிங்கப்பூர் தொகுதி

வானூர்தி மொத்தம் தருவிப்புகள்[5] பயணியர்
ஏர்பஸ் ஏ320-200 20 29 180
மொத்தம் 20 29

அனைத்து வானூர்திகளும் ஒரே கட்டணவகை கொண்ட 180 குறைந்த கட்டண இருக்கைகள் கொண்டவை. இருக்கைகளுக்கிடையேயான இடைவெளி சீர்தர இருக்கைகளிடையே 72.5 செமீயாகவும் கூடுதல் கால்வெளி உள்ள இருக்கைகள் மற்றும் வெளிவாயில் வரிசை இருக்கைகளுக்கு 97.5 செமீயாகவும் உள்ளது.[6]

சூன் 21, 2007இல் அமெரிக்க டாலர்2.2 பில்லியன் பெறுமானமுள்ள மேலும் 30 வானூர்திகளை வாங்கவும் வேண்டுமானால் மேலும் 20 வானூர்திகளைப் பெறவும் உள்ளடக்கிய தீர்மான மடலை கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்தது. இவை 2011இலிருந்து 2014க்குள் வழங்கப்பட வேண்டியவை.[7] இத்தீர்மானத்தை அக்டோபர் 10 அன்று டைகர் ஏர்வேசு உறுதி செய்தது. இவை ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான சேவைகளிலும் ஆத்திரேலியாவின் உள்ளூர் சேவைகளுக்கும் பயன்படுத்தப்போவதாக அறிவித்தது.[8] 2007ஆம் ஆண்டின் திசம்பரில் தனது விருப்பத்தேர்வாக இருந்த கூடுதல் வானூர்திகளையும் வாங்கப்போவதாகவும் இதனால் தனது மொத்த ஏர்பஸ் ஏ320 வானூர்தித் தொகுதி 70ஆக உயரும் எனவும் அறிவித்தது [9]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Tiger Airways appoints new group CEO". Channel News Asia. பார்த்த நாள் 9 July 2012.
  2. Reuters – Fri, Jul 6, 2012 5:43 AM EDT (2012-07-06). "Singapore's Tiger names Koay Peng Yen as new CEO - Yahoo! Finance". Finance.yahoo.com. பார்த்த நாள் 2012-10-01.
  3. "Singapore Air Operators." (Archive) Civil Aviation Authority of Singapore. Retrieved on 31 October 2012. "17 Changi Business Park Central 1, #04-06/09 Honeywell Building, Singapore 486073"
  4. List of aircraft on Singapore Register retrieved 3 April 2013
  5. "Airbus Orders & deliveries". Airbus EADS (2012-09-30). பார்த்த நாள் 2012-10-05.
  6. "Tiger Airways". Tiger Airways. பார்த்த நாள் 2012-10-01.
  7. ஏர்பஸ்(2007-06-21). "Tiger Airways orders up to 50 more A320 aircraft". செய்திக் குறிப்பு.
  8. "Tiger Airways confirms order for 30 Airbus A320 planes". Channelnewsasia.com (2007-10-10). பார்த்த நாள் 2012-10-01.
  9. ஏர்பஸ்(2007-12-18). "Tiger Airways looks to the future with fleet of 70 A320 aircraft". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=டைகர்_ஏர்வேஸ்&oldid=1405609" இருந்து மீள்விக்கப்பட்டது