டேவிட் கோவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் கோவர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் கோவர்
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 479)சூன் 1 1978 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வுஆகத்து 9 1992 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 117 114 448 430
ஓட்டங்கள் 8231 3170 26339 12255
மட்டையாட்ட சராசரி 44.25 30.77 40.08 33.30
100கள்/50கள் 18/39 7/12 53/136 19/56
அதியுயர் ஓட்டம் 215 158 228 158
வீசிய பந்துகள் 36 5 260 20
வீழ்த்தல்கள் 1 0 4 0
பந்துவீச்சு சராசரி 20.00 56.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/1 0/5 3/47 0/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
74/– 44/– 280/1 162/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 1 2007

டேவிட் கோவர் (David Gower , பிறப்பு: ஏப்ரல் 1, 1957), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 117 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில்.விளையாடி 8231 ஓட்டங்களை எடுத்தார். அதில் அதிகபட்சமாக 215 ஓட்டங்களை எடுத்தார். 114 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 448 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 430 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1978 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

கோவர் 1957 இல் டன்ப்ரிட்ஜ் வெல்ஸில் பிறந்தார். இவரது தந்தை, ரிச்சர்ட் கோவர் ஓபிஇ, காலனித்துவ சேவைக்காக அப்போதைய பிரித்தானிய நிர்வாகத்தின் பிராந்தியமான டாங்கன்யிகா பிராந்தியத்தின் தலைநகரான தாருசலாமில் பணிபுரிந்தார். அங்கு கோவர் தனது குழந்தை பருவத்தின் பெரும்பாலான நாட்களை கழித்தார். [1] [2] டாங்கன்யிகாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர் இவரது குடும்பம் இங்கிலாந்து திரும்பியது, கோவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, கென்டில் குடியேறி பின்னர் லாபரோவிற்குச் சென்றார். [2] கோவர் 8 முதல் 13 வயது வரை ஹாக்ஹர்ஸ்டில் உள்ள மார்ல்பரோ ஹவுஸ் பள்ளியில் உள்ள ப்ரெப் பள்ளியில் பயின்றார், அங்கு இவர் தனது விருப்பமான விளையாட்டாக துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார். [3]

இவர் கேன்டர்பரியில் உள்ள கிங்கின் பள்ளியில் கலந்து கொள்ள உதவித்தொகை வழங்கப்பட்டது. [4] கோவர் பள்ளியின் முதல் லெவன் அணியில் தனது 14 ஆம் வயதில் இடம் பெற்றார்.பின்னர் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார் .[5]

சொந்த வாழ்க்கை[தொகு]

கோவர் 1980 களில் தனது காதலி விக்கி ஸ்டீவர்ட்டுடன் 10 ஆண்டு உறவு நிலைப் பொருத்தத்தில் இருந்தார், ஆனால் பின்னர் 1990 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் டைம்ஸில் வெளிவந்த அறிவிப்புடன் அந்த உறவினை முறித்துக் கொண்டார். பின்னர் இவர் 1992 ஆம் ஆண்டில் வின்செஸ்டர் கதீட்ரலில் ஆங்கிலோ / ஐஸ்லாந்தினைச் சேர்ந்தவரான தோருன் நாஷ் என்பவரை மணந்தார்.இவர்கள் ஹாம்ப்ஷயரில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு முறையே 1994 மற்றும் 1996 இல் பிறந்த அலெக்ஸ் மற்றும் சம்மி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

1976 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இங்கிலாந்து இளம் துடுப்பாட்ட அணியின் சார்பாக விளையாட கோவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 27 அன்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவலில் கோவர் விளையாடினார். மட்டையாட்டத்தில் கோவர் முதல் ஆட்டப் பகுதியில் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார், இங்கிலாந்து 164 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இருப்பினும் மேற்கிந்தியத் தீவுகள் 201 ஓட்டங்கள் எடுத்தது. கோவர் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 49 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து 202 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது, மேற்கிந்திய தீவுகளை 143 ஓட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்து 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. [6] 1978 ஆம் ஆண்டில் எட்க்பாஸ்டனில் நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமான அவர், தனது முதல் பந்தில் நான்கு ஓட்டங்களை எடுத்தார்.அந்த வீச்சினை, பாகிஸ்தானின் லியாகத் அலி வீசினார். [7] இங்கிலாந்தின் ஒரே ஆட்டப் பகுதில் 58 ஓட்டங்களையும் , லார்ட்ஸில் 56 மற்றும் ஹெடிங்லேயில் 39 ஓட்டங்களையும் எடுத்தார். [8] ஜூலை 27 அன்று, கோவர் நியூசிலாந்திற்கு எதிராக விளையாடி, தனது முதல் தேர்வு நூறு ஓட்டங்களை எடுத்தார்.

சான்றுகள்[தொகு]

  1. "Player Profile: David Gower". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 March 2009.
  2. 2.0 2.1 Gower, pp. 42–43.
  3. Gower, p. 44
  4. Gower, p. 44
  5. Gower, p. 45.
  6. "West Indies Young Cricketers v England Young Cricketers – England Young Cricketers in West Indies 1976 (Only Test)". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 March 2009.
  7. "Player Profile: David Gower". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 March 2009.
  8. "DI Gower – Batting analysis – Innings List". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 March 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_கோவர்&oldid=3007024" இலிருந்து மீள்விக்கப்பட்டது