டேர்போ பாசுகால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டேர்போ பஸ்கால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Turbo Pascal
உருவாக்குனர்Borland
தொடக்க வெளியீடு1983[1]
இயக்கு முறைமைCP/M, CP/M-86, DOS,
Windows 3.x, Macintosh
தளம்8080/Z80, 8085, x86
மென்பொருள் வகைமைIntegrated development environment
டேர்போ பஸ்கால் 3.0 கையேட்டின் முன்பக்கம்

டேர்போ பஸ்கால் (இலங்கை வழக்கு) அல்லது டர்போ பாஸ்கல் (தமிழக வழக்கு) பஸ்கால் நிரலாக்கல் மொழிக்கான ஓர் கம்பைலரும் முழுமையான ஒருங்கிணைந்த விருத்திச் சூழலும் ஆகும். இது போர்லாண்ட் மென்பொருள் நிறுவனத்தின் முதல் நிறைவேற்று அதிகாரியான பிலிப்பி ஹானின் தலமையில் CP/M, மைக்ரோசாப்ட் டாஸ், CP/M-86 போன்ற இயங்குதளங்களுக்கு என விருத்தி செய்யப்பட்ட மென்பொருள் ஆகும். போர்லாண்ட் பஸ்கால் வணிகரீதியாக மென்பொருளை விருத்தி செய்பவர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. போர்லாண்ட் பஸ்கால் கூடுதலான லைபரரிகளையும் அதற்கான மூலநிரல்களையும் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இருந்து வெளிவந்த நன்கு அறியப்பட்ட பதிப்பான டேர்போ பஸ்கால் என்ற பெயரில் சந்தைப் படுத்தப்பட்டது. போர்லாண்ட் பஸ்கால் என்ற பெயரானது பொதுவாக போர்லாண்ட் நிறுவனத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட பஸ்காலையே குறிப்பிடுகின்றது.

போர்லாண்ட் நிறுவனத்தில் சரித்திரத்தில் ரீதியாக ஆர்வம் உடையவர்களுக்காக மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தில் இயங்கும் பதிப்புக்களாக 1.0 [2], 3.02 [3] மற்றும் 5.5 [4] ஆகிய பதிப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

டேர்போ பஸ்காலிற்கான ஆர்வம்[தொகு]

பிலிப்பி ஹான் உருவாக்கிய போர்லாண்ட் நிறுவனத்திற்கு நிரலாக்கலில் உதவி செய்யும் கருவிகளை உருவாக்குவதில் உள்ள வாய்புக்களை அறிந்து கொண்டார். சரித்திர ரீதியாக நிரலாக்கர்கள் தமது நிரல்களை முதலில் எழுதி, பின்னர் கம்பைல் பண்ணிப் பின்னர் இணைத்தே மென்பொருட்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான கருவிகளே அக்காலப் பகுதியில் பயன்படுத்தப்பட்டது.

1980 களின் ஆரம்பத்தில் பிரத்தியேகக் கணினிகள் பிரபலமாகத் தொடங்கின. அக்காலப் பகுதியில் பிரதானமான நிரலாக்கற் கருவி விருத்தியாளர்களாக ஐபிஎம், மைக்ரோசாப்ட் மற்றும் லட்டிஸ் நிறுவனங்கள் விளங்கின. இவர்கள் எல்லாருமே சி நிரலாகற் கம்பைலர்களை விருத்தி செய்தனர். இவை எல்லாமே ஒரே மாதிரியாகவே வேலை செய்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gajic, Zarko. "Delphi History– from Pascal to Borland Developer Studio 2006". About.com. Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-01.
  2. டேர்போ பஸ்கால் 1.0 அணுகப்பட்டது 22 ஜூன் 2008 (ஆங்கில மொழியில்)
  3. [http://dn.codegear.com/article/20792 டேர்போ பஸ்கால் 3.02 அணுகப்பட்டது 22 ஜூன் 2008
  4. பழைய மென்பொருள்: டேர்போ பஸ்கால் 5.5 அணுகப்பட்டது 22 ஜூன் 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேர்போ_பாசுகால்&oldid=3637176" இலிருந்து மீள்விக்கப்பட்டது