டேனிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(டேனிஷ் மொழி இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
| டேனிய மொழி | ||
|---|---|---|
| நாடுகள்: | டென்மார்க், ஃபாரோ தீவுகள், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, ஜேர்மனி, தெற்கு ஷெல்ஸ்விக் | |
| பேசுபவர்கள்: | ஏறத்தாழ 6 மில்லியன் (2007) | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய ஜெர்மானியம் வட ஜெர்மானியம் கிழக்கு ஸ்கன்டினேவியம் டேனிய மொழி |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | நோர்டிக் அவை |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Dansk Sprognævn ("டேனிய மொழிக் குழு") | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | da | |
| ISO 639-2: | dan | |
| ISO/FDIS 639-3: | dan | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ உச்சரிப்பு குறிகள் யுனிகோட் வடிவில் காணப்படலாம். | ||
டேனிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள ஜெர்மானிய மொழிகளின் துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 6 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், ஆர்ஜெண்டீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.

