டெல்பி (நகரம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டெல்பி தொல்லியல் களம்* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | |
| வகை | பண்பாடு |
| ஒப்பளவு | i, ii, iii, iv, vi |
| மேற்கோள் | 393 |
| பகுதி† | ஐரோப்பா |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1987 (11 ஆவது அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
டெல்பி என்பது கிரீஸ் நாட்டில் உள்ள பர்னாசஸ் மலையின் தென்மேற்கு நீட்சிப் பகுதியில் போசிஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு தற்கால நகரத்தையும் அப்பகுதியிலிருக்கும் ஒரு தொல்லியல் களத்தையும் குறிக்கும். இது பண்டைய கிரேக்க உலகின் முக்கியமான குறிசொல்பவரான, பைத்தியா (Pythia) என்னும் அப்பல்லோ கடவுளின் குறிசொல்பவர் இருந்த இடமாகும். அத்துடன் இது அப்பல்லோ கடவுளை வழிபடுவதற்கான முக்கிய இடமும் ஆகும். இக்கடவுளின் புனித வளாகம், கிரேக்கத்தின் பல பகுதிகளிலுமிருந்து வரும் வீரர்கள் பைத்தியன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் இடமாகவும் இருந்தது. இது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு முன்னோடியாக விளங்கியது.