டெராகெர்ட்சு கதிரியக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெராகெர்ட்சு அலைகள் அகச்சிவப்புக் கதிர்ப் பட்டையின் இறுதியிலும், நுண்ணலைப் பட்டை தொடங்குவதற்கு சற்று முன்னதாகவும் அமைந்துள்ளன.

இயற்பியலில், டெராகெர்ட்சு கதிரியக்கம் (terahertz radiation அல்லது submillimeter radiation, டெராகெர்ட்சு கதிர்கள் (terahertz waves, டெராகெர்ட்சு ஒளி, T-கதிர்கள், (THz) என்பது மின்காந்த அலைத் தொகுதியில் அதிர்வெண் 0.3 முதல் 3 டெராகெர்ட்சு (THz, 10^12 எர்ட்சுகள்)) அதிர்வெண்ணைக் கொண்ட ஒரு சிறு பகுதியாகும். இவைகளின் அலைநீளம் ஒரு மில்லிமீட்டரை விடவும் குறைவு. இவைகள் உயர் அதிர்வெண்ணுடைய நுண்ணலைகளுக்கும் (micro waves ) அகச்சிகப்பு அலைநீளத்திற்கும் இடைப்பட்டன ஆகும். இவைகளை நேரடியாக அளவிடமுடியாது. 10,000 பாகைக்கும் அதிகமான வெப்பநிலையிலுள்ள பொருட்கள் இவ்வகையான கதிர்களை உமிழ்கின்றன.

உடையில் மறைத்து எடுத்துச் செல்லும் பொருட்களைக் கண்டறிய, விமான நிலையங்களில் இக்கதிர்கள் பயன்படும். உணவுப்பொருட்கள் பதப்படுத்தும் தொழில்சாலைகளில், பெட்டிகளைத் திறக்காமலே சோதனை செய்யமுடியும். உலோகமல்லாத பொருட்களை சேதமில்லாமல் பரிசோதனை செய்ய உதவும். அயனியாக்கும் பண்பில்லை. அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய அச்சம் இல்லை.

வெளி இணைப்புகள்[தொகு]