டெட் டேர்னர்
| டெட் டேர்னர் | |
|---|---|
2007இல் டேர்னர் |
|
| பிறப்பு | இராபர்ட்டு எட்வர்டு டேர்னர் III நவம்பர் 19, 1938 சின்சினாட்டி, ஓகியோ, ஐ.அ. |
| கல்வி | மக்கல்லி பள்ளி |
| படித்த கல்வி நிறுவனங்கள் | பிரவுன் பல்கலைக்கழகம் |
| பணி | ஊடக பேருரிமையாளர் |
| அறியப்படுவது | டிபிஎஸ் மற்றும் சிஎன்என் தொலைக்காட்சிகளின் நிறுவனர் முன்னாள் அட்லாண்டா பிரேவ்ஸ் உரிமையாளர் உலக மற்போர் வாகையர் டெட்ஸ் மொன்டானா கிரில் வள்ளல் |
| சொந்த ஊர் | அட்லாண்டா, ஜியார்ஜியா |
| சொத்து மதிப்பு | |
| வாழ்க்கைத் துணை | ஜூலியா கேல் நியே (1960–1964) ஜேன் ஷிர்லி ஸ்மித் (1965–1988) ஜேன் ஃபோன்டா (1991–2001) |
| இணையதளம் | |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | |
இராபர்ட்டு எட்வர்டு "ட்டெட்" டேர்னர் III (Robert Edward Ted Turner III, பி:நவம்பர் 19, 1938[2]) ஓர் அமெரிக்க ஊடக பேருரிமையாளரும் பொதுநல வள்ளலும் ஆவார். ஓர் வணிகராக அமெரிக்காவின் மின்வட தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சி அலைவரிசை சிஎன்என்னை நிறுவியதற்காக அறியப்படுகிறார். தவிர ஓர் பொதுநல வள்ளலாக ஐக்கிய நாடுகளின் தேவைகளுக்காக $1 பில்லியன் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்; இதனைக்கொண்டே ஐக்கிய நாடுகள் பவுண்டேசன் என்ற பொது ஈகை நிறுவனம் உருவாக்கப்பட்டது. டேர்னர் இந்த நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தின் தலைவராக உள்ளார்.[3]
டேர்னரின் வணிகப் பேரரசு அவரது தந்தையின் விளம்பர தட்டிகள் வியாபாரத்தில் துவங்கியது. தமது 24வது அகவையில் தந்தையாரின் தற்கொலையை அடுத்து இந்த வணிகத்தில் இறங்கினார்.[4] 1963ஆம் ஆண்டில் டேர்னர் பொறுப்பேற்றுக் கொண்டபோது டேர்னர் அவுட்டோர் அட்வர்டைசிங்கின் பெறுமதி $1 மில்லியன் ஆக இருந்தது. 1970இல் அட்லாண்டாவிலிருந்த மீயுயர் அதிர்வலை வானொலி நிறுவனத்தை வாங்கியதை ஒட்டி டேர்னர் ஒலிபரப்பு அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் கீழ் நிறுவிய சிஎன்என் கம்பிவடத் தொலைக்காட்சியில் 1986ஆம் ஆண்டில் விண்வெளி போய்மீளும் சாலஞ்சர் தோல்வியையும் 1991இல் பாரசீக வளைகுடாப் போர் நிகழ்வுகளையும் உடனுக்குடன் ஒளிபரப்பி செய்தி ஊடகங்களில் ஓர் அதிர்வை உண்டாக்கினார். அட்லாண்டா பிரேவ்ஸ் என்ற தமது மாநில பேஸ்பால் அணியை கையகப்படுத்திக் கொண்டு தேசிய அளவில் அந்த அணி புகழ்பெறச் செய்தார். நல்லெண்ண விளையாட்டுக்கள் (குட்வில் கேம்ஸ்) என்ற விளையாட்டுத் தொடரை நிறுவினார். தொழில்முறை மற்போரில் ஆர்வத்தைத் தூண்டிய 1990களின் பிற்பகுதியில் மிகவும் பரவலான மற்போர் நிறுவனங்களில் ஒன்றான உலக மற்போர் வாகையர் நிறுவனத்தின் உரிமையாளராவார்.
டேர்னரின் சர்ச்சைகளைக் கிளப்பிய கூற்றுக்களால் இவர் "தெற்கின் வாய்" மற்றும் "ஆவேசமான கேப்டன்" என்றெல்லாம் விளிக்கப்பட்டார்.[5][6] டேர்னர் தமது சொத்துக்களை சுற்றுச்சூழல் காரணங்களுக்காகவும் அர்பணித்துள்ளார். 2011இல் ஜான் மலோன் முந்தும்வரை இவரே அமெரிக்காவின் மிகப்பெரும் தனிநபர் நில உரிமையாளராக இருந்து வந்தார்.[7][8] தமது நிலங்களில் பைசன் காளைகளை வளர்க்கிறார்; இவற்றின் இறைச்சியைக் கொண்டு டெட்ஸ் மொன்டானா கிரில் என்ற உணவகச் சங்கிலியை நடத்தி வருகிறார். சுற்றுச்சூழல் நோக்குடைய கேப்டைன் பிளானட்டும் பிளானட்டீர்களும் என்ற தொடரை உருவாக்கி உள்ளார்.
பொருளடக்கம் |
நூல்கள் [தொகு]
டேர்னருக்கு இருமுனையப் பிறழ்வு நோய் உள்ளது. [9] 1997 ஆம் ஆண்டில் போர்ட்டர் பிப் எழுதிய வாழ்க்கை வரலாறு இது காண்பதுபோல் அவ்வளவு எளிதல்ல (It Ain't As Easy as It Looks) என்ற நூலில், டேர்னர் தமது மனக்கோளாறுடன் தான் படும் வேதனைகளையும் லித்தியம் பயன்படுத்துவது பற்றியும் கூறி உள்ளார். 2008இல் டேர்னர் தமது பணிவாழ்வு மற்றும் தனிவாழ்வு நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் வண்ணம் கால் மீ இட்டெட்]] என்ற நூலை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Forbes. http://www.forbes.com/profile/ted-turner/.
- ↑ Encyclopædia Britannica. "Ted Turner – Britannica Online Encyclopedia". Britannica.com. பார்த்த நாள் March 24, 2010.
- ↑ "UN Foundation".
- ↑ Porter Bibb (1996). Ted Turner: It Ain't As Easy as It Looks: The Amazing Story of CNN. Virgin Books. pp. 55–56. ISBN 0-86369-892-1. http://www.amazon.com/gp/reader/155566203X.
- ↑ Porter Bibb (1996). Ted Turner: It Ain't As Easy as It Looks: The Amazing Story of CNN. Virgin Books. pp. 138, 272, 283, 442. ISBN 0-86369-892-1. http://www.amazon.com/gp/reader/155566203X.
- ↑ Koepp, Stephen (April 12, 2005). "Captain Outrageous Opens Fire". Time. http://www.time.com/time/magazine/article/0,9171,1048325,00.html.
- ↑ Doyle, Leonard (December 1, 2007). "Turner becomes largest private landowner in US – Americas, World". London: The Independent. http://www.independent.co.uk/news/world/americas/turner-becomes-largest-private-landowner-in-us-761711.html. Retrieved March 29, 2009.
- ↑ "For Land Barons, Acres by the Millions". The New York Times. January 28, 2011. http://www.nytimes.com/2011/01/29/us/29land.html.
- ↑ At long last, he's citizen Ted
மேலும் அறிய [தொகு]
- Call Me Ted by Ted Turner and Bill Burke (Grand Central Publishing, 2008) ISBN 978-0-446-58189-9
- Racing Edge by Ted Turner (Simon & Schuster, 1979) ISBN 0-671-24419-1
வாழ்க்கை வரலாறுகள் [தொகு]
- Media Man: Ted Turner's Improbable Empire by Ken Auletta (W. W. Norton, 2004) ISBN 0-393-05168-4
- Clash of the Titans: How the Unbridled Ambition of Ted Turner and Rupert Murdoch Has Created Global Empires that Control What We Read and Watch Each Day by Richard Hack (New Millennium Press, 2003) ISBN 1-893224-60-0
- Me and Ted Against the World: The Unauthorized Story of the Founding of CNN by Reese Schonfeld (HarperBusiness, 2001) 0060197463
- Ted Turner Speaks: Insights from the World's Greatest Maverick by Janet Lowe (Wiley, 1999) ISBN 0-471-34563-6
- Riding A White Horse: Ted Turner's Goodwill Games and Other Crusades by Althea Carlson (Episcopal Press, 1998) ISBN 0-9663743-0-4
- Porter Bibb (1996). Ted Turner: It Ain't As Easy as It Looks: The Amazing Story of CNN. Virgin Books. ISBN 0-86369-892-1. http://www.amazon.com/gp/reader/155566203X/ref=sib_dp_pt/002-4443697-6472033#reader-link.
- Citizen Turner: The Wild Rise of an American Tycoon by Robert Goldberg and Gerald Jay Goldberg (Harcourt, 1995) ISBN 0-15-118008-3
- CNN: The Inside Story: How a Band of Mavericks Changed the Face of Television News by Hank Whittemore (Little Brown & Co, 1990) ISBN 0-316-93761-4
- Lead Follow or Get Out of the Way: The Story of Ted Turner by Christian Williams (Times Books, 1981) ISBN 0-8129-1004-4
- Atlanta Rising: The Invention of an International City 1946–1996 by Frederick Allen (Longstreet Press, 1996) ISBN 1-56352-296-9
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Ted Turner தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |