டி. வீ. சங்கரநாராயணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. வீ. சங்கரநாராயணன் (திருவாலங்காடு வெம்பு ஐயர் சங்கரநாராயணன், பி. மார்ச் 7 , 1945) தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். கருநாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயரின் மருமகன் ஆவார் இவர்.
பொருளடக்கம் |
ஆரம்பகால வாழ்க்கை [தொகு]
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் பிறந்த இவர், 9 ஆவது வயதில் இசைப் பயிற்சியை தனது மாமா மதுரை மணி ஐயரிடமிருந்து பெற ஆரம்பித்தார்.
தொழில் வாழ்க்கை [தொகு]
இவர் 1968 ஆம் ஆண்டு தனது முதல் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இந்தியா முழுக்கவும் உலகின் பல நாடுகளிலும் இவர் பாடியுள்ளார். பல பாடல் தொகுப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
விருதுகள் [தொகு]
- சங்கீத ரத்னகாரா, 1975; வழங்கியது: வசர் கல்லூரி
- காயக சிகாமணி விருது, 1981; வழங்கியது: பைரவி, அமெரிக்க ஐக்கிய நாடு
- இன்னிசை பேரரசு, 1981; பாரதி கலாமன்றம், டொரோண்டோ
- சுவர லயா ரத்னகாரா விருது, 1986; வழங்கியது: ராமகிருஷ்ணானந்த சரஸ்வதி, ஸ்ரீ வித்யாஷ்ரம், ரிஷிகேஷ்
- ஞானகலாரத்னம், 1987; வழங்கியவர்: செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர்
- நாதகனல், 1987; வழங்கியது: நாதகனல், சென்னை
- சங்கீத நாடக அகாதமி விருது, 1990
- சுவர யோக சிரோன்மணி, 1997 ; வழங்கியது: யோக ஜிவன சட்சங்கா (பன்னாட்டு அமைப்பு)
- பத்ம பூஷன் விருது, 2003
- சங்கீத கலாநிதி விருது, 2003 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- சங்கீத கலாசிகாமணி விருது, 2005 ; வழங்கியது: தி இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
மேற்கோள்கள் [தொகு]
- On a joyous musical journey த ஹிந்து நாளிதழிலிருந்து