டி. என். அனந்தநாயகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. என். அனந்தநாயகி ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக பேசின்பிரிட்ஜ் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்[1][2][3] , மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும்[4] மூன்றுமுறை - 1957, 1962 மற்றும் 1971 - தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6][7]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

1931 இல் பிறந்த அனந்தநாயகி, பாபநாசத்தில் பள்ளிக்கல்வியும் இராணி மேரி கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் உயர்கல்வியும் கற்றார். இவரது கணவர் பெயர் டி.ராஜ்மோகன். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு. இவர் 1946 ம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்; இரு முறை சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Basin Bridge (State Assembly Constituency)
  2. Madras State legislative assembly election, 1957
  3. Madras State legislative assembly election, 1962
  4. Tamil Nadu legislative assembly election, 1971
  5. 1957 Madras State Election Results, Election Commission of India
  6. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.
  7. "1971 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2012-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._என்._அனந்தநாயகி&oldid=3556520" இலிருந்து மீள்விக்கப்பட்டது