தீவி தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டிவி தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டிவி தீவுகளின் செய்மதிப் படம், மேற்கே பாத்தர்ஸ்ட் தீவு, கிழக்கே மெல்வில் தீவு
தீவி தீவுகள் is located in Northern Territory
தீவி தீவுகள்
ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் டிவி தீவுகள்

தீவி தீவுகள் (Tiwi Islands, /ˈtwi/[1]) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் நகரில் இருந்து 880 கிமீ வடக்கே, அரபூரா கடலுக்கும் திமோர் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டத்தில் கிழக்கே மெல்வில் தீவு, மேற்கே பாத்தர்ஸ்ட் தீவு ஆகிய தீவுகள் ஆப்சிலி நீரிணையினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 8,320 சதுர கிமீ (3,212 சதுர மைல்கள்) ஆகும். மெல்வில் தீவின் பரப்பளவு 5.786 சதுர கிமீ ஆகும். இது டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும்.

தீவி தீவுகளில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள்

இத்தீவுகளில் பழங்குடிகளான தீவி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு முன்னர் இருந்தே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பண்பாடு மற்றும் மொழி ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களினதையும் விட வித்தியாசமானவை. கிட்டத்தட்ட 2,500 டிவி மக்கள் இங்கு வருகின்றனர். 1996 ஆம் ஆண்டில் இத்தீவுகளின் மொத்த மக்கள்தொகை 2,033 ஆக இருந்தது. இவர்களில் 93.8 விழுக்காட்டினர் பழங்குடிகள். இவர்களில் பெரும்பாலானோரின் முதல் மொழி டிவி, இரண்டாவது மொழி ஆங்கிலம் ஆகும்.

1912 ஆம் ஆண்டில் இத்தீவுகள் பழங்குடியினரின் சிறப்பு நிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, 1980 ஆம் ஆண்டில் இத்தீவுகளின் உரிமை தீவி பழங்குடிகளின் நில அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது[2]. 2001 ஜூலை 12 இல் இங்கு உள்ளூராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

படிமங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Laurie Bauer, 2007, The Linguistics Student’s Handbook, Edinburgh
  2. "டிவு தீவு உள்ளூராட்சி: வரலாறு". Archived from the original on 2007-10-21. பார்க்கப்பட்ட நாள் 2009-05-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீவி_தீவுகள்&oldid=3587231" இலிருந்து மீள்விக்கப்பட்டது