டிவிடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டிவிடி என்பது இறுவட்டுகளைக் காட்டிலும் ஆறு மடங்கு கூடுதல் தரவுகளைச் சேமிக்க கூடியது. இன்று நிகழ்படங்கள் எண்மிய வடிவில் டிவிடியிலேயே பெரிதும் சேமிக்கப்படுகின்றன. VHS அரிதாகி, டிவிடி பயன்பாடு கூடி வருகிறது. இறுவட்டுகளின் பயன்பாடும் அருகி வருகிறது.
டிவிடி என்பது DVD என்ற ஆங்கில சுருக்கத்தின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு ஆகும். இதன் ஆங்கில விரிவு Digital Versatile Disc என்பதை தமிழில் எண்மிய பல்திற வட்டு எனலாம்.