டிராவலர் (இசைத் தொகுப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிராவலர்
வெளியீடு13 அக்டோபர் 2011 (2011-10-13)
இசைப் பாணிஇந்திய இசை மற்றும் ப்ளெமெங்கோ
நீளம்62:55
இசைத்தட்டு நிறுவனம்டச்சு கிராமோபோன்
இசைத் தயாரிப்பாளர்ஜாவியர் லிமோன்

டிராவலர் (இசைத் தொகுப்பு) (Traveller) இந்திய சிதார் இசைக் கலைஞர் அனௌஷ்கா ஷங்கரால் தொகுக்கப்பட்ட இசைத் தொகுப்பு ஆகும். இது இந்திய இசை மற்றும் ப்ளெமெங்கோ ஆகியவற்றின் கலவையாகும். இந்த இசைத் தொகுப்பு அக்டோபர் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த இசைத் தொகுப்பைத் தயாரித்தவர் வாவியர் லிமோன் (Javier Limón) ஆவார்.[1] இந்த இசைத் தொகுப்பானது 2013 ஆம் ஆண்டில் சிறந்த உலக இசை எனும் பிரிவில் டச்சு கிராமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இத்தொகுப்பானது விருதைப் பெற இயலவில்லை. அந்த வருடத்திற்கான விருது அனெளஷ்கா ஷங்கரின் தந்தை மறைந்த ரவி சங்கரின் தி லிவ்விங் ரூம் செசன்ஸ் பகுதி 1 (The Living Room Sessions Part 1) வழங்கப்பட்டது. அந்த விருதை அவருக்குப் பதிலாக அனெளஷ்கா பெற்றுக் கொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ANOUSHKA SHANKAR Traveller - Catalogue". Deutsche Grammophon. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
  2. "Ravi Shankar wins posthumous Grammy for best world music album". Reuters (India). 11 February 2013. Archived from the original on 17 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)