தன்சானியா
| Jamhuri ya Muungano wa Tanzania
தன்சானியா ஐக்கியக் குடியரசு
United Republic of Tanzania |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Uhuru na Umoja" (சுவாஹிலி) "விடுதலையும் ஐக்கியமும்" |
||||||
| நாட்டுப்பண் Mungu ibariki Afrika "ஆபிரிக்காவைக் கடவுள் காப்பாராக" |
||||||
| தலைநகரம் | டொடோமா (சட்டரீதியாக) தாருஸ்ஸலாம் (வர்த்தகத் தலைநகர்) |
|||||
| பெரிய நகரம் | தாருஸ்ஸலாம் | |||||
| ஆட்சி மொழி(கள்) | கிசுவாகிலி | |||||
| மக்கள் | தன்சானியர் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | சக்காயா மிரிசோ கிக்வேட்டே | ||||
| - | தலைமை அமைச்சர் | எட்வர்ட் லொவாசா | ||||
| விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
| - | தங்கனீக்கா | டிசம்பர் 9 1961 | ||||
| - | சன்சிபார் | ஜனவரி 12 1964 | ||||
| - | இணைப்பு | ஏப்ரல் 26 1964 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 9,45,087 கிமீ² (31வது) 3,64,898 சது. மை |
||||
| - | நீர் (%) | 6.2 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | நவம்பர் 2006 மதிப்பீடு | 37,849,133 (32வது) | ||||
| - | 2002 குடிமதிப்பு | 34,443,603 | ||||
| - | அடர்த்தி | 41/கிமீ² (159வது) 106/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $27.12 பில்லியன் (99வது) | ||||
| - | நபர்வரி | $723 (178வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2000–01) | 34.6 (மத்தி) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | தன்சானிய ஷில்லிங்கு (TZS) |
|||||
| நேர வலயம் | கிஆநே (ஒ.ச.நே.+3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | அவதானிக்கப்படுவது இல்லை (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .tz | |||||
| தொலைபேசி | +255 | |||||
தன்சானியா (Tanzania, கிசுவாகிலி: Jamhuri ya Muungano wa Tanzania), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ மக்களாட்சிக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.
இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சன்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தன்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனீக்கா சன்சிபாருடன் 1964 இல் இணைந்து தங்கனீக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தன்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது[1].
1996 இல் அரச அலுவலகங்கள் அனைத்தும் தாருஸ்ஸலாமில் இருந்து டொடோமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது. தாருஸ்ஸலாம் வணிகத் தலைநகராக உள்ளது.[1][2]
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- தன்சானியா இணையத்தளம்
- தன்சானியா சுற்றுலாத்துறை
- "பிபிசி நாட்டுத் தரவுகள்: தன்சானியா". பிபிசி செய்திகள்.