டப்பிளின் கருவம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டப்பிளின் கருவம் (Dublin Core) எனப்படுவது வளங்களை சேமிப்பதற்கும் கணடுபிடிப்பதற்கும் உதவும் மேல்நிலைக் கலைச்சொல் பட்டியல் ஆகும். இதனைப் பயன்படுத்தி பல்வேறு நிகழ்படம், படம், வலைப்பக்கம் போன்ற இணைய வளங்களையும் நூல், பொருள் போன்ற பெளதீக வளங்களையும் விபரிக்க முடியும். டப்பிளின் கருவம் பல்வேறு அனைத்துல சீர்தரங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எளிய டப்பிளின் கருவ மேனிலைத் தரவு கணம் [தொகு]
- பெயர்/தலைப்பு - Title
- ஆக்கர் - Creator
- துறை - Subject
- விபரிப்பு - Description
- பதிப்பகர் - Publisher
- பங்களிப்பாளர் - Contributor
- திகதி - Date
- வகை - Type
- வடிவம் - Format
- இனங்காட்டி - Identifier
- மூலம் - Source
- மொழி - Language
- உறவு - Relation
- துழாவுகை - Coverage
- உரிமங்கள் - Rights