ஞானி (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஞானி (பிறப்பு: சூலை 1, 1935) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி. இவர் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மார்க்சியக் கோட்பாட்டாய்வுகளையும் செய்து வருபவர். முன்பு தமிழாசிரியராக பணியாற்றி பணி நிறைவு பெற்று, தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். மார்க்சிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜனின் வழி வந்தவர். பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்ஸியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்ஸியத்தை விளக்க முயன்றவர்.

ஞானி புதியதலைமுறை, நிகழ் என இரு சிற்றிதழ்களை நடத்திவந்தார். இப்போது தமிழ்நேயம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார். கவிதைக்காக உருவான வானம்பாடி இயக்கத்தில் முக்கியமான பங்காற்றியிருக்கிறார். ஞானிக்கு கனடாவில் இருந்து வழங்கப்படும் இயல்விருது 2010ல் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு சிறந்த நூலாசிரியர் விருது[தொகு]

இவர் எழுதிய “மார்க்சியம் பெரியாரியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]

நூல்கள்[தொகு]

  • ஞானி எழுதிய நூல்கள்
  • கவிதை
  • கல்லிகை
  • மார்க்ஸிய ஆய்வுகள்
  • மார்க்ஸியமும் தமிழும்
  • கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.

வெளியிணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஞானி_(எழுத்தாளர்)&oldid=1547272" இருந்து மீள்விக்கப்பட்டது