ஜெய்ப்பூர் கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய்ப்பூர் கால் அல்லது ஜெய்ப்பூர் புட் (Jaipur Foot) என்பது ரப்பர் முதலிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒருவகை செயற்கை கால்கள் ஆகும். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில இது உருவானதால் அந்த நகரத்தின் பெயரிலேயே இது ஜெய்பூர் கால் என அறியப்படுகிறது. இது விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், போலியோ நோயால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்பு செயல்படாமல் போனவர்கள், கண்ணிவெடித் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் போன்றோரை மனதில் வைத்து பி.கே. சேத்தி என்ற இந்திய மருத்துவரால் 1969 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மிக குறிந்த விலையில் உருவாக்கக் கூடிய, நீரில் பயன்படுத்தக்கூடிய மற்றும் எளியவர்கள் வாங்கும் வண்ணம் இவ்வகை செயற்கை கால்கள உருவாக்கப்படுகிறது. இந்தியால் கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு சில தன்னார்வ நிறுவனங்கள் இலவசமாகவே இந்த கால்களை பொருத்தி உதவுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ப்பூர்_கால்&oldid=2588057" இலிருந்து மீள்விக்கப்பட்டது