ஜெய்ப்பூர் இலக்கிய விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜெய்ப்பூர் இலக்கிய விழா
Gulzar javedakhtar prasoonjoshi.jpg
2011 ஜெய்ப்பூர் இலக்கியவிழாவில் ஜாவேத் அக்தர், குல்சார் மற்றும் பிரசூன் ஜோஷி
இடம் ஜெய்ப்பூர், இந்தியா
முதல் மாநாடு 2006
இணையத்தளம்
http://jaipurliteraturefestival.org/

ஜெய்ப்பூர் இலக்கிய விழா (Jaipur Literature Festival) 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளிர்சிவப்பு வண்ண நகரம் எனப் பெயர்பெற்றுள்ள இராசத்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவாகும்.[1] [2] இங்குள்ள டிக்கி அரண்மனை ஓட்டல் விழா மையமாக திகழ்கிறது. இவ்விழா இந்தியாவில் மட்டுமன்றி ஆசியாவிலேயே பெரும் நிகழ்வாக இளங்குகிறது.[3] நகரத்தின் மையத்திலுள்ள டிக்கி ஓட்டலின் அரங்கத்திலும் பூங்காக்களிலும் சனவரி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் இராசத்தானிய, இந்திய மற்றும் பன்னாட்டு படைப்புகள் கொண்டாடப்படுகின்றன.

இந்த விழாவினை டீம்வொர்க் தயாரிப்பின் சஞ்சய் ராய் உருவாக்கிட எழுத்தாளர்கள் நமீதா கோகலே மற்றும் வில்லியம் டால்ரிம்பிள் விழா இயக்குனர்களாக உள்ளனர். ஃபெய்த் சிங் நிறுவிய ஜெய்ப்பூர் விரசத் பவுண்டேசன் இதற்கு முனைப்பாக விளங்கியது. [4] ஜெய்ப்பூர் மரபுடமை பன்னாட்டு விழாவின் அங்கமாக 2006ஆம் ஆண்டு துவங்கிய இவ்விழா 2008ஆம் ஆண்டிலேயே தனது சொந்த வலிமையில் தனித்து இயங்கக்கூடிய ஒரு விழாவாக உதவியது. [1][5] இந்த பவுண்டேசனின் சமூக இயக்குனர் வினோத் ஜோஷி இவ்விழாவின் மண்டல பரிந்துரையாளராக உள்ளார். விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கட்டணமில்லாத இலவச நிகழ்வுகளாகும்.

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 "Writes of passage". Hindustan Times. 2008-01-30. http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=0640ff75-70ec-460d-8d06-a9bfc6d124aa. Retrieved 2008-04-23. 
  2. Literacy in India & the Jaipur Literature Festival, January 25th, 2010. "Today [Jan 25, 2010] marks the end of the 5th annual Jaipur Literature Festival .. First organized in 2005.."
  3. மிராண்டா செய்மோர் ,த மெயில், ஞாயிறு ,ஆகத்து 10, 2008 - "the grandest literary Festival of them all"
  4. "In the throes of joy". The Hindu. 2006-01-20. http://www.hindu.com/fr/2006/01/20/stories/2006012002190400.htm. Retrieved 2008-08-12. 
  5. "Looking for something special? Try treasure hunting in India". KiwiCollection.com. பார்த்த நாள் 2008-04-22.

வெளியிணைப்புகள் [தொகு]