ஜென்சென் அக்லஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜென்சென் அக்லஸ்
2013 காமி அக்லஸ்
பிறப்புஜென்சென் ரோஸ் அக்லஸ்
மார்ச்சு 1, 1978 ( 1978 -03-01) (அகவை 46)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1996–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
டன்னீல் ஹாரிஸ் (2010-அறிமுகம்)
பிள்ளைகள்1

ஜென்சென் ரோஸ் அக்லஸ் (பிறப்பு: மார்ச் 1, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் இயக்குனர். இவர் 1996ம் ஆண்டு விஷ்போன் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து மிஸ்டர் ரோட்ஸ், சய்பில், டேஸ் ஆப் அவர் லைவ்ஸ், ஸ்டில் லைப், ஸ்மால்வில் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும், டென் இன்ச் ஹீரோ, மை ப்ளூடி வாளேண்தினே 3டி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் தற்பொழுது சூப்பர்நேச்சுரல் என்ற தொடரில் முக்கியகதாபாத்திரங்களில் நடிக்கின்றார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

அக்லஸ் டாலஸ், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவரின் தாயார் டோனா ஜோன் மற்றும் தந்தை ஆலன் ரோஜர் அக்லஸ், இவர் ஒரு நடிகர். இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி உண்டு. இவர் ஆங்கிலம், ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மருத்துவம் படிக்க திட்டமிட்டு இருந்தார் ஆனால் இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் இடம் மாறியதால் நடிப்புத்துறைக்கு வந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

  • 2004: The Plight of Clownana
  • 2005: தேவூர்
  • 2007: டென் இன்ச் ஹீரோ
  • 2009: மை ப்ளூடி வாளேண்தினே 3டி
  • 2010: பேட்மேன்: Under the Red Hood (குரல் பாத்திரம்)

சின்னத்திரை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜென்சென்_அக்லஸ்&oldid=3087636" இலிருந்து மீள்விக்கப்பட்டது