ஜி. கே. வாசன்
| ஜி. கே. வாசன் | |
![]() |
|
|
|
|
|
|
|
| தொகுதி | தமிழ்நாடு |
|---|---|
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| கட்சி பொறுப்பு | பொதுச்செயலாளர் |
|
|
|
| பிறப்பு | திசம்பர் 28, 1964 சுந்தரபெருமாள் கோவில்,தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு |
| கல்வி | பி.ஏ. நிருவன செயலியல் |
| வாழ்க்கைத் துணை |
சுனிதா |
| பிள்ளைகள் | பிரனாவ் கருப்பையா |
| இருப்பிடம் | சென்னை |
| இணையதளம் | www.gkvasan.net |
ஜி. கே. வாசன் (பிறப்பு: டிசம்பர் 28, 1964) தமிழ்நாட்டு அரசியல்வாதி. தமிழ் மாநில காங்கிரஸ், மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர்.
குடும்பம் [தொகு]
ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஜி. கே. மூப்பனார், தாயார் பெயர் கஸ்தூரி. சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிருவன செயலியல் பட்டம் பெற்றார். 29-11-1996 ல் சுனிதாவை திருமணம் புரிந்தார்.
வகித்த பதவிகள் [தொகு]
தனது தந்தையின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் , இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். திருவையாறு தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும்,அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.
