கோ. நா. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி. என். ராமச்சந்திரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோ. நா. இராமச்சந்திரன்
G.N. Ramachandran
G N Ramachandran.jpg
பிறப்பு அக்டோபர் 8, 1922(1922-10-08)
பிறப்பிடம் எர்ணாகுளம், கேரளம்[1][2][3][4][5]
இறப்பு ஏப்ரல் 7, 2001 (அகவை 78)
இறப்பிடம் சென்னை, தமிழ்நாடு
தேசியம் இந்தியர்
கல்வி கற்ற இடங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   ச. வெ. இராமன்
அறியப்படுவது இராமச்சந்திரன் வரைபடம்
சமயம் இந்து சமயம்

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran, அக்டோபர் 8, 1922 - ஏப்ரல் 7, 2001), இருபதாம் நூற்றாண்டு இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவர். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், ஜி. ஆர். நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியரின் மூத்த மகனாகப் பிறந்தார். பெப்டைடுகளின் கட்டமைப்பை அறிய உதவும் இராமச்சந்திரன் வரைபடம் என்ற கண்டுபிடிப்புக்காக அவர் போற்றப்படுகிறார். உயிரியலிலும் இயற்பியலிலும் முக்கியக் ஆய்வுகளை நிகழ்த்தியவர்; குறிப்பாக, மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய அறிதல்கள். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது. மிகப்பெரிய அறிவியலாளராக இருந்தும், மிக எளிமையான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் கையாண்டு இவர் ஆற்றிய உரைகள், பள்ளி மாணவர்களுக்குக் கூட புரியும் வண்ணம் இருந்தது. இவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. எஆசு:10.1098/rsbm.2005.0024
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
  2. PMID 11566125 (PubMed)
    Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
  3. PMID 11468366 (PubMed)
    Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
  4. PMID 11385557 (PubMed)
    Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
  5. PMID 11373614 (PubMed)
    Citation will be completed automatically in a few minutes. Jump the queue or expand by hand
"http://ta.wikipedia.org/w/index.php?title=கோ._நா._இராமச்சந்திரன்&oldid=1502966" இருந்து மீள்விக்கப்பட்டது