ஜிப்ரால்டர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிப்ரால்டர் கல்லூரி என்பது பிரித்தானியரின் ஆட்சிக்கு உட்பட்ட ஜிப்ரால்டர் நாட்டில் அமைந்துள்ள கல்லூரி. இது பதின்வயதைத் தாண்டியவருக்கு கல்வி கற்பிப்பதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது. இங்கு இருபாலரும் கல்வி பயில்கின்றனர். இதை ஜிப்ரால்டர் அரசு நிர்வகிக்கிறது. முதலில் பொதுக் கல்லூரியாக இருந்து, பின்னர் தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்றப்பட்டதுனிது ஜிப்ரால்டரின் தெற்கு பேஸ்டன் பகுதியில் அமைந்துள்ளது. இதை 1985 முதலே ஜிப்ரால்டர் அரசு நடத்துகிறது. 1949 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தொழில் நுட்பப் பள்ளி, பின்னர் கல்லூரியாக மாற்றப்பட்டது. இதன் முதல்வராகப் பணியாற்றிய க்ளீவ் பெல்டிரான் என்பவர், ஜிப்ரால்டர் அரசின் கல்வித் துறை அமைச்சராக பணிபுரிந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்ரால்டர்_கல்லூரி&oldid=3632776" இலிருந்து மீள்விக்கப்பட்டது